கடைசி பேட்ச் மிஸா யூதர்கள் இஸ்ரேல் பயணம்
அய்ஸ்வால்:மிஸோரம் மாநிலத்தில் வசித்து வந்த யூதர்களின் கடைசிப் பிரிவினர் இஸ்ரேலுக்குப் புறப்பட்டுச் சென்றனர்.
இஸ்ரேலை ஆண்டு வந்த ஐந்தாம் ஷால்மனேசர் காலத்தில் யூத இனத்தைச் சேர்ந்த 10 பழங்குடியினர் நாட்டைவிட்டு துரத்தப்பட்டனர். அங்கிருந்து அவர்கள் மெசபடோமியா (சிரியா) மற்றும் மெடீஸ் (ஈராக்) ஆகியநாடுகளில் அடைக்கலம் புகுந்தனர்.
பின்னர் அவர்களில் ஒரு பிரிவினர் அங்கிருந்து சீனா வழியாக இந்தியாவின் வட கிழக்குக்கு இடம் பெயர்ந்துகுடியேறினர். இந்தியாவுக்கு வந்து குடியேறிய யூத இனத்தவர்களின் பெயர் நியே மனேஷே ஆகும். மனேஷேஎன்பவரின்வழித்தோன்றல்கள் இவர்கள் எனக் கூறப்படுகிறது.
மனேஷே பிரிவு யூதர்கள் இந்தியாவின் மிஸோராம், மணிப்பூர் மாநிலங்களில் குடியேறினர். இங்கு கிட்டத்தட்ட7000 மனேஷே பிரிவு யூதர்கள் வசித்து வருகிறார்கள். மனேஷே பிரிவு யூதர்கள் கி.மு. 721ம் ஆண்டுக்குப்பின்னர் எங்குமேதென்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் மிஸோரம், மணிப்பூரில் வசித்து வருபவர்கள்தான் மனேஷே பிரிவு யூதர்கள் என சமீபத்தில்தெரிய வந்தது. இதையடுத்து இஸ்ரேல் அரசு இதுகுறித்து விசாரிக்க யூத மத குருக்களை மிஸோரக்குஅனுப்பியது. அவர்களின்விசாரணையில் இது உறுதியானது. இதையடுத்து இவர்களை யூதர்களாக இஸ்ரேல் அரசு அங்கீரித்தது. மேலும்இவர்களை இஸ்ரேலில் குடியேறவும் அனுமதித்தது.
இதைத் தொடர்ந்து யூத மத பழக்க வழக்கப்படி மிஸோரமின் மனேஷே பிரிவு யூதர்களுக்கு சடங்குகள்செய்யப்பட்டு அவர்கள் யூதர்களாக மாற்றப்பட்டனர். இதையடுத்து அவர்களை படிப்படியாக இஸ்ரேலுக்குகொண்டு செல்லும் பணிகள்தொடங்கின.
முதல் குழு கடந்த நவம்பர் 15 மற்றும் 16 ஆகிய நாட்களில் கொல்கத்தா வழியாக மும்பைக்கு வந்தனர்.அங்கிருந்து 21ம் தேதி அவர்கள் இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
தற்போது கடைசிப் பிரிவு மனேஷே பிரிவு யூதர்கள் 65 பேர் அடங்கிய கடைசிக் குழு நேற்று டெல் அவிவுக்குப்புறப்பட்டுச் சென்றது. இதுகுறித்து இவர்களை இஸ்ரேலுக்கு அனுப்பும் பணியை மேற்பார்வையிடும் பணியில்ஈடுபட்ட ஜெரீமியா ஹம்தே கூறுகையில், மொத்தம் 217 மனேஷே பிரிவு யூதர்கள் இஸ்ரேல் சென்றுள்ளனர்.
அனைவரும் இஸ்ரேலின் வடக்கு கர்மீல் மற்றும் நாசரேத் ஆகிய இடங்களில் தங்க வைக்கப்படுவர். அங்கு ஒருவருடம் இவர்கள் தங்க வைக்கப்படுவர். அவர்களுக்கு ஹீப்ரு மொழியும், யூத மதப் பழக்க வழக்கங்களும்கற்றுத் தரப்படும்.அவர்களுக்குப் பொருத்தமான வேலையும் ஏற்பாடு செய்து தரப்படும். அதன் பின்னர் இஸ்ரேலில் எங்குவேண்டுமானாலும் அவர்கள் தங்க அனுமதிக்கப்படுவர் என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications