புலிகளுக்கு தடையில்லை: இலங்கை முடிவு
கொழும்பு:விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு மீண்டும் தடை விதிக்கும் எண்ணம் இல்லை என்றுஇலங்கை அரசு தெரிவித்துள்ளது.
அதேசமயம் விடுதலைப் புலிகள் அமைப்பின் செயல்பாடுகளை கட்டுப்படுத்தும்அளவுக்கு கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.தனித் தமிழ் ஈழத்தை அடைவதே இனி இனப் பிரச்சினைக்கு ஒரே தீர்வு எனவிடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர். இதனால் இலங்கை நிலைமைமோசமடைந்துள்ளது.
நார்வே தூதுக் குழுவினர் மீண்டும் ஒரு சமரச முயற்சிகளைத் தொடங்கியுள்ளநிலையில், அவர்களை வவுனியாவுக்குச் சென்று விடுதலைப் புலிகள் அமைப்புநிர்வாகிகளை சந்திக்கக் கூடாது என இலங்கை அரசு தடை விதித்து விட்டது. இதனால்சமரச முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகள் அமைப்புக்கு மீண்டும் தடை விதிக்க இலங்கை அரசு திட்டமிட்டுவருவதாக செய்திகள் கிளம்பியுள்ளன. ஆனால் இதை மூத்த அரசு அதிகாரி ஒருவர்மறுத்துள்ளார்.
பெயர் கூற விரும்பாத அந்த அதிகாரி கூறுகையில், விடுதலைப் புலிகள் அமைப்புக்குதடை விதிக்கும் எண்ணம் இப்போதைக்கு அரசிடம் இல்லை.
அதற்கு மாறாக, விடுதலைப் புலிகள் அமைப்பு தொடர்பான நடவடிக்கைகள்கடுமையாக கண்காணிக்கப்படும். தடுப்பு நடவடிக்கைகள், தண்டனைகள்,கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படும்.
விடுதலைப் புலிகளுக்கு உதவியாக இருக்கும் அனைவரும கடுமையாகதண்டிக்கப்படுவர். மேலும் அவசர நிலை கட்டுப்பாட்டுச் சட்டம் கொண்டு வரப்படும்.என்ன மாதிரியான கட்டுப்பாடுகள் கொண்டு வரப்படும் என்பது குறித்துஇப்போது கூற முடியாது.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் அமலுக்கு வரும் வாய்ப்பு உள்ளது. 2002ம் ஆண்டுபோர் நிறுத்த ஒப்பந்தத்திற்குப் பின்னர் இந்த சட்டம் முடங்கிக் கிடக்கிறது என்றார்.
விடுதலைப் புலிகளுக்கு தடை விதிக்காமல் அதேசமயம், தமிழர்களுக்கு கடுமையானபல கட்டுப்பாடுகளையும், பயங்கரவாத சட்டத்தையும் ஏவிட இலங்கை அரசுதீர்மானித்துள்ளதையே இது காட்டுகிறது.
இந்த பயங்கரவாத தடைச் சட்டம் மற்றும் புதிய கட்டுப்பாடுகள் குறித்த அறிவிப்புவிரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முடிவுகள் அனைத்தும்அதிபர் ராஜபக்ஷே தலைமையில் இன்று காலை நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில்எடுக்கப்பட்டுள்ளன.
விடுதலைப் புலிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்க ராஜபக்ஷேஅரசு முடிவு செய்துள்ளதன் மூலம் போர் அபாயம் மேலும் அதிகரிக்கும் எனத்தெரிகிறது.
புலிகள் தாக்குதலில் 40 வீரர்கள் பலி:
இதற்கிடையில் இலங்கையின் கிழக்கில் உள்ள வாகரைப் பகுதியில் ராணுவ வீரர்கள் மீது விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் 40 ராணுவ வீரர்கள்கொல்லப்பட்டனர். விடுதலைப் புலிகள் தரப்பில் 15 பேர் இறந்ததாகத் தெரிகிறது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வாகரைப் பகுதியைக் கைப்பற்ற ராணுவம் நேற்று கடும் தாக்குதலில் இறங்கியது. டாங்குகளுடன் முன்னேறியராணுவத்தைத் தடுத்து விடுதலைப் புலிகள் கடும் தாக்குதல் நடத்தினர்.
இரு தரப்புக்கும் இடையே நீண்ட நேரம் நடந்த இந்த சண்டையின் இறுதியில், 40 ராணுவத்தினரும், 15 விடுதலைப் புலிகளும் உயிரிழந்தனர். ராணுவத் தரப்பில்பலர் படுகாயம் அடைந்தனர்.
இந்த இழப்பால் ஆத்திரமடைந்த இலங்கை ராணுவம், பொதுமக்களின் குடியிருப்புகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
விடுதலைப் புலிகள் தரப்பிலான உயிரிழைப்பை மட்டும் ராணுவம் உறுதி செய்துள்ளது. ஆனால், ராணுவத் தரப்பிலானஉயிரிழப்பு குறித்து தகவல் எதையும் வெளியிடவில்லை.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications