முல்லை பெரியாறு-கைகோர்த்த திமுக, அதிமுக
டெல்லி:முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தை திமுக, அதிமுக எம்பிக்கள் மாநிலங்களவையில் எழுப்பியதோடு,அணைக்கு கடற்படையினர் சென்றதற்கு கடும் கண்டனமும் தெரிவித்தனர்.
ராஜ்யசபாவில் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னைகள் குறித்து பேசும் நேரத்தில்முல்லை பெரியாறு அணை விவகாரத்தை திமுக மற்றும் அதிமுக எம்பிக்கள்கிளப்பினர்.
அதிமுக சார்பில் தங்கத்தமிழ்ச் செல்வன் பேசுகையில்,
தமிழகத்தின் தென்மாவட்ட மக்களுக்கு குடிநீர் மற்றும் பாசனம் தேவைகளுக்கானஉள்ள முக்கிய ஆதாரமாக முல்லை பெரியாறு அணை உள்ளது.
ஆனால், சில ஆண்டுகளுக்கு முன் அணை பலவீனமாக உள்ளதாகவும், 136 அடிக்குமேல் தண்ணீர் தேக்க முடியாது என்றும் கேரள அரசு கூறியது.
வறட்சி நிலவும் தென் மாவட்டங்களின் மிக முக்கியமான நீர் ஆதாரமாக இந்த அணைஇருப்பதால் இந்தப் பிரச்னையில் தலையிடும்படி மத்திய அரசிடம் தமிழகம்முறையிட்டது.
இதையடுத்து மத்திய நீர்வள கமிஷனைச் சேர்ந்த நிபுணர்கள் மற்றும் பொறியாளர்கள்ஆகியோர் அடங்கிய குழு அணைக்கு சென்று ஆய்வு நடத்தி நீர் மட்டத்தை உயர்த்திக்கொள்ளலாம் என்று பரிந்துரை செய்தது.
இந்தப் பரிந்துரையை ஏற்று பல கோடி ரூபாய் செலவு செய்து அணையைபலப்படுத்தியது தமிழக அரசு. ஆனால், கேரளாவோ 142 அடி வரை தண்ணீர் தேக்கஅனுமதிக்க மறுக்கிறது.
கடந்த அதிமுக ஆட்சியில் போடப்பட்ட வழக்கு காரணமாக 2006ம் ஆண்டு பிப்ரவரி27ம் தேதி உச்ச நீதிமன்றமும் 142 அடி வரை நீரைத் தேக்கி வைக்க உத்தரவிட்டது.ஆனால், இந்த தீர்ப்பும் கேரள அரசால் புறக்கணிக்கப்பட்டுள்ளது.
கடைமடை பகுதியில் இருப்பதால் தமிழகம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே,உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அமல்படுத்தவும், தமிழகத்தின் உரிமையைபாதுகாக்கவும் மத்திய அரசு உடனடியாக தலையிட வேண்டும் என்றார் தங்கத்தமிழ்ச்செல்வன்.
இதையடுத்துப் பேசிய திமுக எம்.பியான சண்முகசுந்தரம் (ஜெயலலிதா மீது டான்சிவழக்கு போட்டதற்காக ரெளடிகளால் தாக்கப்பட்டவர்) பேசுகையில்,
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கடற்படையைச் சேர்ந்த அதிகாரிகளும்படையினரும் அடங்கிய 17 பேர் கருவிகளை எடுத்துக் கொண்டு கேரள ஐஜியின்மேற்பார்வையின் முல்லை பெரியாறு அணைக்கு சென்றனர்.
தமிழக அரசுக்கு சொந்தமான இந்த அணையை நிர்வகிப்பது தமிழக பொறியாளர்கள்தான். இந்நிலையில், தமிழக அரசு மற்றும் மத்திய நீர்வள அமைச்சகம் ஆகியவற்றுக்குதெரியாமல் தன்னிச்சையாக செயல்பட்டு கடற்படை வீரர்களை கேரளாஅனுப்பியுள்ளது அதிர்ச்சியளிக்கிறது.
இச்செயல் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது. கூட்டாட்சி அமைப்பு உள்ளஇந்தியாவில், இரு மாநிலங்களுக்கு இடையே பிரச்னை நிலவும் சூழ்நிலையில்,பிரச்னை நீதிமன்றத்தில் இருக்கும் போது, கடற்படை வீரர்கள் அங்கு போனது ஏன்?
இதுபோன்ற சட்டத்திற்கு விரோதமான நடவடிக்கைகளை உடனடியாக மத்திய அரசுதடுத்து நிறுத்த வேண்டும் என்றார்.
மத்திய பாதுகாப்பு அமைச்சராக கேரளத்தைச் சேர்ந்த ஆண்டனி இருப்பதுகுறிப்பிடத்தக்கது. ஆண்டனியும் கேரள முதல்வரும் கைகோர்த்துக் கொண்டுகடற்படையினரை அனுப்பியதாக தமிழகம் குற்றம் சாட்டுகிறது.
கடற்படையினரை முல்லைப் பெரியாறுக்கு அனுப்பியதன் மூலம் இந்திய பாதுகாப்புஅமைச்சரான ஆண்டனி, கேரள பாதுகாப்பு அமைச்சர் போல செயல்பட்டுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications