ஈராக்கில் பெரும் தோல்வியே: யுஎஸ் அமைச்சர்
வாஷிங்டன்:ஈராக் போரில் அமெரிக்காவுக்கு வெற்றி கிடைக்கவில்லை. அங்கு எங்களது படைகள் வெற்றி பெறவில்லைஎன்று அமெரிக்காவின் புதிய பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள ராபர்ட் கேட்ஸ் கூறியுள்ளார்.
அமெரிக்க நாடாளுமன்ற செனட் மற்றும் பிரதிநிதிகள் சபைக்கு நடந்த தேர்தலில் அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின்குடியரசுக் கட்சி பெரும் அடி வாங்கியதைத் தொடர்ந்து பாதுகாப்புத் துறை அமைச்சர் ரம்ஸ்பெல்ட்பதவியிலிருந்து விலகினார்.
அவருக்குப் பதில் புதிய அமைச்சராக முன்னாள் சிஐஏ தலைவரான ராபர்ட் கேட்ஸ் நியமிக்கப்பட்டார்.
அவரது நியமனத்தை அங்கீகரிப்பது குறித்து செனட்டுக்கு, பாதுகாப்பு விவகாரத் துறை கமிட்டி பரிந்துரைக்கவேண்டும். இதற்காக கேட்ஸ், கமிட்டி முன்பு ஆஜராகி கமிட்டியின் பல்வேறு கேள்விகளுக்குப் பதில் அளித்தார்.
அப்போது கேட்ஸ் கூறுகையில், இன்னும் ஒரு அல்லது இரண்டு ஆண்டுகளில் ஈராக்கில் நிலைத்தன்மையும்,அமைதியும் திரும்புவதை நாம் உறுதி செய்ய வேண்டும். இல்லாவிட்டால், பிராந்திய மோதல்கள் ஏற்படும்அபாயம் ஏற்படுவதை நம்மால் தடுக்க முடியாது என்றார் கேட்ஸ்.
அப்போது கமிட்டியில் இருந்த ஜனநாயகக் கட்சி உறுப்பினர் கார்ர் லெவின், ஈராக் போரில் அமெரிக்காவுக்குவெற்றி கிடைக்கவில்லையா என்று கேட்டபோது, இல்லை என்றார் கேட்ஸ்.
தொடர்ந்து அவர் கூறுகையில், அதேசமயம் நாம் எதையும் இழக்கவும் இல்லை. ஈராக்கில் தொடர்ந்துகுழப்பங்கள் நிலவாத வகையில் திட்டங்களை அமல்படுத்த வேண்டும். அப்போதுதான் அப்பிராந்தியத்தின்நீடித்த நிலைத்தன்மையை உறுதிசெய்ய முடியும் என்றார்.
இந்த கூட்டத்திற்குப் பின்னர் கேட்ஸை பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கலாம் என்ற பரிந்துரையை செனட்டுக்கு,பாதுகாப்பு விவகார கமிட்டி தெரிவித்தது. இதையடுத்து விரைவில் கேட்ஸை பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கசெனட்சபை ஒப்புதல் அளிக்கும் எனத் தெரிகிறது. அதன் பிறகு கேட்ஸ் பொறுப்பை ஏற்பார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications