சிக்கினார் வீடு பிராடு யோபு சரவணன்

Subscribe to Oneindia Tamil

Yobu Saravananவேலூர்:வீடு கட்டித் தருவதாக கூறி நூற்றுக்கணக்கான காண்டிராக்டர்களிடம் பல கோடிபணத்தை ஸ்வாஹா செய்து விட்டு தலைமறைவாக இருந்து வந்த பிஷப் யோபுசரவணனை போலீஸார் கைது செய்துள்ளனர்.

ஏழை எளிய மக்களுக்கு இலவச வீடுகள் கட்டித் தரும் திட்டம் என்ற மோசடியானதிட்டத்தை அறிவித்து தமிழகம் முழுவதும் நூற்றுக்கணக்கான காண்டிராக்டர்களிடம்பல கோடி பணத்தை சுருட்டியதாக சில மாதங்களுக்கு முன்பு போலி பிஷப்ஆனந்தராஜ் என்பவர் கைது செய்யப்பட்டார்.

அடுத்த சில நாட்களிலேயே இதேபோன்ற மோசடியில் சிக்கினார் யோபு சரவணன்.இவரும் ஒரு போலி பிஷப்தான். வேலூரைச் சேர்ந்த யோபு, சென்னை முகப்பேரில்அறக்கட்டளை ஒன்றை ஆரம்பித்து இந்த மோடியைச் செய்தார்.

சர்ச்சை கிளம்பியவுடன் யோபு தலைமறைவாகி விட்டார். அவரால் ஏமாற்றப்பட்டஏராளமான காண்டிராக்டர்கள் சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீஸில் புகார்கொடுத்தனர்.

இதையடுத்து யோபுவை போலீஸார் தேடி வந்தனர். 4 மனைவிகள், 7குழந்தைகளுடன் தலைமறைவான யோபுவை போலீஸார் தேடி வந்தனர். இந்தவழக்கு சிபிசிஐடிக்க மாற்றப்பட்ட பிறகு தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டது.

இந்த நிலையில் வேலூரில் யோபு தலைமறைவாக இருக்கும் இடம் குறித்துபோலீஸாருக்குத் தெரிய வந்தது. இதையடுத்து அங்கு விரைந்த போலீஸார் அவரைவளைத்துப் பிடித்தனர்.

பலத்த பாதுகாப்புடன் யோபுவை சென்னைக்குக் கொண்டு வந்த போலீஸார் ரகசியஇடத்தில் வைத்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். முகப்பேரில் உள்ளஅலுவலகத்திற்கு யோபுவை போலீஸார் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.இதேபோல கொளத்தூர், பெரவள்ளூர் உள்ளிட்ட இடங்களுக்கும் அழைத்துச் சென்றுஅங்குள்ள அவரது வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையின்போதுநூற்றுக்கணக்கான தஸ்தாவேஜூகள் சிக்கின.

இதேபோல வேலூரில் உள்ள யோபுவின் வீட்டிலும் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.காண்டிராக்டர்களிடம் மோசடி செய்த பணத்திலிருந்து 4 சொகுசு கார்களையும்,ஏராளமான சொத்துக்களையும் வாங்கிக் குவித்துள்ளார் யோபு. மேலும்,ரூ. 50 கோடிஅளவுக்கு மோசடியாக சம்பாதித்த பணத்தையும் அவர் மறைத்து வைத்துள்ளார்.

இந்த மோசடிப் பணம் குறித்தும் யோபுவிடம் போலீஸார் விசாரணை நடத்திவருகிறனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+