பள்ளிக்கூட சுவர் இடிந்து விழுந்து மாணவன் பலி

Subscribe to Oneindia Tamil

சென்னை:சென்னையில் பள்ளியின் சுற்றுச் சுவர் இடிந்து விழுந்ததில் மாணவன் ஒருவன் பலியானான். மேலும் ஒருமாணவன் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளான். இச் சம்பவத்தையடுத்து பெற்றோர்அந்தப் பள்ளியை முற்றுகையிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அம்பத்தூர் எம்டிஎச் சாலையில் உள்ள பிஜி குப்தா மேல்நிலைப் பள்ளியில் இச் சம்பவம் நடந்தது.

சுமார் 3,000 மாணவர்கள் படிக்கும் இந்தப் பள்ளியில் முகுந்தன், யோசன் ராஜ் ஆகிய மாணவர்கள் பள்ளிவளாகத்தில் இன்று காலை விளையாடிக் கொண்டிருந்தனர்.

அப்போது அவர்கள் வீசிய பந்து பள்ளிக்கு வெளியே போய் விழுந்தது. பந்தை எடுக்க யோசன் ராஜ் சுவர் மீதுஏறினான், முகுந்தன் கீழே நின்று கொண்டிருந்தான்.

அப்போது அந்த சுவர் அப்படியே சரிந்து விழுந்தது. முகுந்தனும் யோசன் ராஜும் சுவர் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர். பிற மாணவர்களும் ஆசிரியர்களும் வந்து இருவரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்குக்கொண்டு சென்றனர்.

ஆனால், சிகிச்சை பலனின்றி முகந்தன் இறந்தான். யோசன் ராஜின் உடல் நிலை மோசமானதையடுத்து அவன்சென்னை பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான்.

இதையடுத்து அந்தப் பள்ளியை பெற்றோர் முற்றுகையிட்டனர். பள்ளி நிர்வாகிகளை கைது செய்யக் கோரிகோஷமிட்டனர். இதனால் அங்கு பெரும் பதற்றம் நிலவியது. போலீசார் விரைந்து வந்து சமாதானப்படுத்தினர்.

இச் சம்பவத்தால் இன்று பள்ளி மூடப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+