கருணாநிதி, ஜெ., அமைச்சருக்கு கொலை மிரட்டல்
கோவை:முதல்வர் கருணாநிதி, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமிஆகியோரை கொலை செய்யப் போவதாக மிரட்டி கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்கு கடிதம்வந்துள்ளது.
மாவட்ட ஆட்சித் தலைவர் நீரஜ் மிட்டலின் பெயருக்கு இக்கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. மணிகண்டன்,செல்போன் 9840350 என்ற முகவரி கடிதத்தின் பின்புறம் உள்ளது.
கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: முதல்வர் கருணாநிதி, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, ஊரகதொழில்துறை அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி ஆகியோரை பாபர் மசூதி இடிப்பு தினமான டிசம்பர் 6ம் தேதி(நேற்று) கொலை செய்வேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கடிதம் ரேஸ்கோர்ஸ் சாலை காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது. ஆட்சித் தலைவர் கொடுத்தபுகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து கடிதம் அனுப்பிய நபர் யார் என்பது குறித்து விசாரித்துவருகின்றனர்.
முதல்வர் கருணாநிதியை மனித வெடிகுண்டு மூலம் கொலை செய்யப் போவதாக ஏற்கனவே 2 முறை மிரட்டல்கடிதங்கள் வந்தன. இந்த நிலையில் மீண்டும் ஒரு கொலை மிரட்டல் கடிதம் வந்துள்ளது காவல்துறைக்கு பெரும்சவாலாக உள்ளது. இதுவரை வந்த 3 கடிதங்களுமே கோவை மாவட்டத்திலிருந்துதான் அனுப்பப்பட்டுள்ளனஎன்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications