தேமுதிக கூட்டத்தில் பயங்கர கோஷ்டி மோதல்
கடலூர்:கடலூர் மாவட்ட தேமுதிக கூட்டத்தில் பயங்கர கோஷ்டி மோதல் வெடித்தது. இருக்கைகளைத் தூக்கி வீசிஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதில் பெண் நிர்வாகி உள்பட பலர் காயமடைந்தனர்.
உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள், கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க கடலூர் டவுன்ஹாலில்தேமுதிக கூட்டம் நடந்தது. இதில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டம் ஆரம்பித்ததும் பார்த்திபன் என்பவரது தலைமையில் அவரது ஆதரவாளர்கள் 50 பேர் உள்ளேநுழைந்தனர். தனக்கு எதிராகவும், தனது ஆதரவாளர்களைப் புறக்கணிக்கும் வகையிலும் மாவட்ட கட்சி நிர்வாகம்செயல்படுவதாக கூறி கோஷமிட்டார் பார்த்திபன்.
இதனால் அங்கு பெரும் ரகளை மூண்டது. பார்த்திபன் ஆதரவாளர்களும், மற்றவர்களும் சரமாரியாக தாக்குதலில்இறங்கினர். இருக்கைகளை தூக்கி வீசி தாக்கிக் கொண்டனர். இதனால் அந்த இடமே போர்க்களம் போலமாறியது.
இந்த தாக்குதல் சம்பவத்தில் நாகலட்சுமி என்பவருக்கு படுகாயம் ஏற்பட்டது. மேலும் சிலரும் காயமடைந்தனர்.மோதலில் ஈடுபட்டவர்கள் கிழிந்த சட்டையும், வேட்டியுமாக அந்த இடத்தை விட்டு வெளியேறினர்.












Click it and Unblock the Notifications