காங்கிரசுக்கு ஜெயலலிதா ஐஸ்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:காங்கிரஸ் கட்சியை நான் எதிரியாக பார்க்கவில்லை. அக்கட்சி என்னை எதிரியாக நினைத்தால் அதற்கு நான்பொறுப்பல்ல. அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை, நிரந்தர நண்பர்களும் இல்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

நாடாளுமன்ற நூலகத்தில் முன்னாள் முதல்வரும், அதிமுகவை நிறுவியவருமான எம்.ஜி.ஆரின் சிலை இன்றுதிறந்து வைக்கப்படுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக புதன்கிழமை மாலை ஜெயலலிதா டெல்லி வந்தார்.

விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், கடந்த பாஜக தலைமையிலான மத்திய அரசுஆட்சியில் இருந்தபோது எம்.ஜி.ஆர். சிலை வைக்க அனுமதி அளிக்கப்பட்டது. சிலை அமைக்கப்பட்டு,நாடாளுமன்றக் குழுவின் ஒப்புதலும் பெறப்பட்டது.

ஆனால் அதை நிறுவும் நிலையில்தான் கருணாநிதி குறுக்கிட்டு தடை செய்து விட்டார். அதன் பின்னர் அதிமுககடுமையாக போராடி தற்போது சிலை திறப்பு நடைபெறவுள்ளது என்றார் ஜெயலலிதா.

விழாவுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை அழைத்துள்ளீர்கள். காங்கிரஸுடன் தொடர்பு உள்ளதாஎன்று கேட்டபோது, அரசியலில் நிரந்தர எதிரிகளும் இல்லை, நண்பர்கள் இல்லை. அவர்கள் எங்களைஎதிரிகளாக நினைத்தால் அதற்கு நான் பொறுப்பில்லை என்றார் ஜெயலலிதா.

தமிழகத்தில் அணி மாற்றம் இருக்குமா? என்ற மற்றொரு கேள்விக்கு நிச்சயம் அணி மாற்றம் ஏற்படும். அதற்கானவாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன என்றார் ஜெயலலிதா.

மூன்றாவது அணி அமைப்பது குறித்துப் பேசுவீர்களா என்று ஒரு செய்தியாளர் கேட்டபோது, பொறுத்திருந்துபாருங்கள் என்று பதிலளித்தார் ஜெயலலிதா.

பின்னர் முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினை தொடர்பாக தான் பிரதமரை சந்திக்கும் திட்டமில்லை என்றும்அதிமுக எம்.பிக்கள் பிரதமரை சந்தித்துப் பேசுவார்கள் எனவும் ஜெயலலிதா தெரிவித்தார்.

பின்னர் உ.பி. முதல்வர் முலாயம் சிங் யாதவை, சமாஜ்வாடி கட்சித் தலைவர் அமர்சிங்கின் இல்லத்தில் சந்தித்துப்பேசினார் ஜெயலலிதா. அப்போது சமாஜ்வாடிக் கட்சி எம்.பிக்களான நடிகைகள் ஜெயா பச்சன், ஜெயப்பிரதாஆகியோரும் உடன் இருந்தனர். மரியாதை நிமித்தமாக முலாயமை பார்க்க வந்ததாக ஜெயலலிதா தெரிவித்தார்.

முன்னதாக டெல்லி வந்த ஜெயலலிதாவுக்கு அதிமுக தொண்டர்கள் பெருமளவில் திரண்டு தடபுடலானவரவேற்பைக் கொடுத்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+