சிலை உடைப்புக்கு மன்னிப்பேயில்லை-கருணாநிதி
சென்னை:பெரியார் சிலையை சேதப்படுத்தியவர்கள் மன்னிக்கப்படக் கூடியவர்கள் அல்ல என முதல்வர் கருணாநிதிகூறினார்.
திருச்சியில் ஸ்ரீரங்கத்தில் பெரியார் சிலை உடைக்கப்பட்டது தொடர்பாக காங்கிரஸ் உறுப்பினர் ஞானசேகரன்சட்டசபையில் இன்று கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தார். இதற்கு பதிலளித்த முதல்வர் கருணாநிதி,
இது தொடர்பாக இன்று காலை எனக்கு செய்தி வந்தது. ஸ்ரீரங்கம் காவல் நிலையம் எதிரே தந்தை பெரியார் சிலைவைக்க பெரியார் சுயமரியாதை பிரச்சார இயக்கத்துக்கு 144 சதுர அடி நிலம் வழங்கப்பட்டது.
கடந்த 21ம் தேதி சிலை நிறுவப்பட்டு அதை திறப்பதற்காக வெள்ளைத் துணியால் மூடி வைக்கப்பட்டுள்ளது.கடந்த 28ம் தேதி ஸ்ரீரங்கத்தின் புனிதம் காப்போர் கூட்டமைப்பு என்ற பெயரில் நடந்த ஒரு கூட்டத்தில் இந்துமக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் அர்ஜூன் சம்பத் பேசும்போது, பெரியார் சிலையை திறந்தால்உண்ணாவிரதம், சாலை மறியல் செய்வோம் என்று பேசியதோடு ஆத்திரமூட்டும் செயலிலும் ஈடுபட்டார்.
சிலையை திறக்க தி.க. தலைவர் வீரமணி அறிவிப்பு வெளியிடவிருந்த நிலையில் இந்து இளைஞர் மன்றத்தலைவர் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் சிலையை திறக்க இடைக்கால தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்தமனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இந் நிலையில் இப்போது பெரியாரின் சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளது என்ற செய்தி வந்திருக்கிறது.
பெரியார் சிலை மட்டுமல்ல பெரும் தலைவர்களுடைய சிலைகளிலும் அந்தத் தலைவர் சொன்ன கருத்துக்களிலும்வேறுபாடான நிலை சிலருக்கு இருக்கலாம். அதற்காக சிலைகளை சேதப்படுத்துவதை அனுமதிக்க முடியாது.இந்த அரசு நிச்சயம் அதை அனுமதிக்காது.
பெரியாருடைய சிலை என்றால் அதை சேதப்படுத்தியவரையும் சேர்த்து மனிதாக்கியவரின் சிலை. அதைமறந்துவிடக் கூடாது. இந்த சிலையை உடைத்தவர்கள் யாராக இருந்தாலும் மன்னிக்கப்படக் கூடியவர்கள் அல்ல.
இதனால் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு விஷமத்தனத்தைச் செய்த 4 பேர் கைதாகியிருக்கிறார்கள். மேலும்விசாரணை நடக்கிறது. கருத்துக்கு கருத்து, எண்ணங்களுக்கு எண்ணம், கொள்கைக்கு கொள்கை என்ற மோதல்இருக்க வேண்டுமே தவிர சிலைகளை உடைப்பது, சீரழிப்பது போன்றவற்றை பொறுக்க முடியாது.
இன்று நடந்த விஷமத்துக்கு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். இதை மேலும் வளர்த்து பூதாகரமாக்காமல்இருக்க வேண்டும் என அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.












Click it and Unblock the Notifications