இலங்கை தமிழர் நலன்-சட்டமன்றத்தில் தீர்மானம்
சென்னை:இலங்கைத் தமிழர்களின் உயிர், உடமை, பாதுகாப்புக்கு ஒரு நிரந்தரத் தீர்வை ஏற்படுத்த மத்திய அரசுநடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இலங்கைத் தமிழர் பிரச்சனை குறித்து தமிழக சட்டசபையில் பாமக தலைவர் ஜி.கே. மணி, காங்கிரஸ் எம்எல்ஏசுதர்சனம், இந்திய கம்யூனிஸ்ட் எம்எல்ஏ சிவபுண்ணியம் ஆகியோர் பிரச்சனை கிளப்பினர்.
மணி பேசுகையில், இலங்கை தமிழர் விவகாரம் குறித்து சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்குஅனுப்ப வேண்டும் என்றார்.
சுதர்சனம் பேசுகையில், இலங்கை தமிழர்கள் பிரச்சனையை சமாளிப்பது தொடர்பான பொறுப்பை காங்கிரஸ்தலைவர் சோனியா காந்தியும், பிரதமர் மன்மோகன் சிங்கும் ஏற்பார்கள் என்றார்.
இது தொடர்பாக தொடர்ந்து நடந்த விவாதத்துக்கு முதல்வர் கருணாநிதி பதிலளித்துப் பேசுகையில்,
தமிழக மக்களின் உணர்வு, கடந்த சில நாட்களாக போராட்டங்கள் மூலம் வெளிப்பட்டு வருகிறது. நான் டெல்லிசென்றபோது இது குறித்து சோனியாவுடம் பேசினேன். வாய்ப்பு ஏற்பட்டால் இன்னும் எடுத்துக் கூறுவேன்.
சமீபத்தில் தமிழகம் வந்த முன்னாள் அமெரிக்க அதிபர் கிளின்டன் இலங்கை விவகாரம் குறித்துப் பேசியதாகஜி.கே.மணி குறிப்பிட்டார். அதிபராக இருந்தபோது கிளின்டன் இது பற்றி பேசவில்லை. அமெரிக்கஏகாதிபத்தியம் அவரை பேச விடவில்லை.
இலங்கை பிரச்சனை இன்னும் நீடிக்க வேண்டும் என்று நான் விரும்பவில்லை. இந்த பிரச்சனை தொடர்பாகதமிழக மக்கள் பல்வேறு வழிகளில் போராட்டம் நடத்துவது மத்திய அரசுக்கும் தெரியும்.
பிரதமரின் பாதுகாப்புச் செயலாளர் நாராயணன், வெளியுறவுத்துறைச் செயலாளர் சிவசங்கர மேனன் ஆகியோர்என்னை சந்தித்தபோது இதை எடுத்துக் கூறியிருக்கிறேன்.
இதற்கிடையே இந்த பிரச்சனைக்கு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கைஎழுந்துள்ளது. தமிழர்களை காக்க வேண்டும் என்ற உணர்வோடு, அதே நேரத்தில் மத்திய அரசுக்கு நெருக்கடிகொடுக்காமல் ஒரு தீர்மானத்தை நிறைவேற்ற விரும்புகிறேன். அந்த தீர்மானம் இது தான்:
இலங்கைத் தமிழர்களின் உயிர், உடமை, பாதுகாப்புக்கு ஒரு நிரந்தரத் தீர்வு ஏற்படுத்த வேண்டும். இந்த சபைஆழ்ந்த வேதனை தெரிவிப்பதோடு, இலங்கை தமிழர்கள் அமைதியாக வாழ நடவடிக்கை எடுக்க வேண்டும்இந்திய அரசை இந்த அவை கேட்டுக் கொள்கிறது என்றார் கருணாநிதி.
இந்தத் தீர்மானம் பின்னர் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
இந்தியா தூங்கும் புலி: ஸ்ரீரவிசங்கர்
இந் நிலையில் இலங்கை பிரச்சனையை இந்தியா வேடிக்கை பார்த்துக் கொண்டு சும்மா இருக்க கூடாது என ஆர்ட்ஆப் லிவிங் அமைப்பின் நிறுவனரும், ஆன்மீகத் தலைவருமான ஸ்ரீரவிசங்கர் கூறியுள்ளார்.
ஆர்ட் ஆப் லிவிங் அமைப்பின் வெள்ளி விழா கொண்டாட்டதின் ஒரு பகுதியாக சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் ஸ்ரீரவிசங்கர் பங்கேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஸ்ரீரவிசங்கர் பேசியதாவது,
இந்தியா தூங்கும் புலியாக உள்ளது. அண்டை நாட்டு மக்கள் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால்அதில் நாம் பங்கொடுக்காமல், உதவி செய்யாமல் வேடிக்கை பார்த்து வருகிறோம். இது சரியில்லை. நாம் உதவிசெய்ய வேண்டும். உலகிற்கொல்லாம் அமைதி ஏற்படுத்தும் வல்லமை இந்தியாவிடம் உள்ளது.
ஆனால் இலங்கையில் மற்ற நாடுகள் அமைதி நடவடிக்கையில் ஈடுபடும்போது. நாம் ஏன் செய்யக்கூடாது.பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லையா? நமது பொறியாளர்களின் தலையை வெட்டி அனுப்பியஆப்கானிஸ்தானில் வளர்ச்சிக்காக ரூ. 35,000 கோடியை வழங்கியுள்ளோம்.
எனவே நம்மை சுற்றியுள்ள இலங்கை, நேபாளம், வங்கதேசம் உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கும் உதவி செய்யவேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications