எம்ஜிஆர் சிலை திறப்பு-சோனியா மிஸ்ஸிங்
டெல்லி:டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று எம்ஜிஆர் முழு உருவச்சிலை திறக்கப்பட்டது. ஆனால், இந்நிகழ்ச்சியில் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் வாஜ்பாய்ஆகியோர் பங்கேற்கவில்லை.
நாடாளுமன்ற நூலகத்தில் முன்னாள் முதல்வரும், அதிமுக நிறுவனருமான எம்ஜிஆரின் முழு உருவ சிலையைமுன்னாள் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி இன்று காலை திறந்துவைத்தார்.
இந்த விழாவில் துணை ஜனாதிபதி பைரோன் சிங் ஷெகாவத், மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், பிரணாப்முகர்ஜி, பிரயரஞ்சன் தாஸ் முன்ஷி, பாஜக தலைவர் அத்வானி ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிஎம்பி குருதாஸ் தாஸ்குப்தா, சமாஜ்வாடி கட்சியின் பொதுச் செயலாளர் அமர்சிங், தெலுங்கு தேசக் கட்சி எம்பி எர்ரன் நாயுடுஉள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் சசிகலாவும் கலந்து கொண்டார். மேலும் முன்னாள் அமைச்சர்கள் பன்னீர்செல்வம், ஜெயகுமார்,செங்கோட்டையன், பாண்டுரங்கன், மதுசூதனன், தளவாய் சுந்தரம், நைனார் நகேந்திரன், வளர்மதி, செம்மலை, சத்தியமூர்த்திமற்றும் அதிமுக எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனர்.
ஆனால் இவ்விழாவிற்கு கலந்து கொள்ள பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி,முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆகியோருக்கும் ஜெயலலிதா அழைப்பு விடுத்திருந்தும் அவர்கள் கலந்துகொள்ளவில்லை.
சிலை திறப்பு நிகழ்ச்சி முடிந்ததும் ஜெயலலிதா நிருபர்களிடம் கூறியதாவது,
புரட்சி தலைவர் எம்ஜிஆரின் சிலையை திறப்பதற்கு தமிழக முதல்வர் கருணாநிதி பல தடைகளை கொடுத்தார்.அவற்றையெல்லாம் மீறி வெற்றிகரமாக இப்போது எம்ஜிஆரின் முழு உருவ சிலை திறக்கப்பட்டு இருக்கிறதுஎன்றார். சிலை திறப்புக்காக டெல்லி சென்ற அதிமுக உறுப்பினர்கள் 100 பேரும் இன்று மாலை மீண்டும்விமானம் மூலம் சென்னை திரும்புகிறார்கள்.
மாறன் சிலை: கருணாநிதி டெல்லி பயணம்
இந் நிலையில் நாளை நாடாளுமன்றத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் சிலைதிறக்கப்படுவதையொட்டி முதல்வர் கருணாநிதி இன்று டெல்லி செல்கிறார்.












Click it and Unblock the Notifications