நுழைவுத் தேர்வு ரத்து-திருத்தம் கோரும் ராமதாஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை:நுழைவுத் தேர்வு ரத்து செய்யும் சட்டத்தில் மதிப்பெண் சமப்படுத்ததல் என்ற பிரிவில் திருத்தம் கொண்டு வரவேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கோரியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:

நுழைவுத் தேர்வு முறையை ரத்து செய்வது என்று முடிவெடுத்து, அதற்கான சட்ட முன்வடிவை முதல்வர்கருணாநிதி தலைமையிலான திமுக அரசு நிறைவேற்றியிருப்பதற்காக திமுக அரசை பாராட்டுகிறேன். இந்த சட்டமுன்வடிவை வரவேற்கிறேன்.

நுழைவுத் தேர்வு எழுதுகின்றவர்களில் பெரும்பான்மையானோர் கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள். அவர்களதுநலனுக்காகவே நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் பல்வேறு பாடத் திட்டங்களின் கீழ் தேர்வு எழுதும் மாணவர்களின் மதிப்பெண்களை இயல்பாகசராசரி நிலைக்குக் கொண்டு வருகிறோம் என்று கூறி அதற்காக வகுக்கப்பட்டுள்ள மதிப்பெண் சமப்படுத்துதல்என்கிற நடைமுறை இந்த நோக்கத்தை நிறைவேற்றுமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

மாநிலக் கல்வி பாடத் திட்டத்தை விட பிற கல்வி பாடத் திட்டங்கள் கடினமானவை என்றும், அதில் தேர்ச்சிபெறுகிற மாணவர்கள் பெறும் மதிப்பெண்கள் குறைவு என்றும் ஒரு தவறானபிரசாரம் திட்டமிட்டுபரப்பப்பட்டுள்ளது. அதற்கு அரசு இரையாகி விடக் கூடாது.

மதிப்பெண் சமப்படுத்ததல் என்கிற நடைமுறை இந்த கற்பனையான, தவறான பிரசாரத்திற்கு எதிரொலி என்றேகருத இடமிருக்கிறது. மாநிலக் கல்வித் திட்டத்தில் பயிலும் மாணவர்கள் எல்லோரும் 100க்கு நூறு மதிப்பெண்கள்பெற்று விடுவதில்லை. அவர்களில் 80 முதல் 90 வரை மதிப்பெண்கள் பெறுகிறவர்கள்தான் அதிகம்.

இந்த மாணவர்கள்தான் தொழில் கல்வி படிப்பில் சேர போட்டியிடுகின்றனர். அதே நேரத்தில் 80 முதல் 90சதவீதம் வரை மதிப்பெண்கள் பெறுகிற பிற கல்வித் திட்ட மாணவர்களுக்கு மதிப்பெண் சமப்படுத்துதல்நடைமுறையினால், சட்ட மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ள கணக்கின்படி 8 முதல் 10 மதிப்பெண் கூடுதலாககிடைக்க வாய்ப்புள்ளது.

இந்த நிலையில் எண்ணிக்கையில், மிகச் சிறுபான்மையாக உள்ள பிற கல்வித் திட்ட மாணவர்களுக்கு கூடுதல்மதிப்பெண் வழங்கி அவர்களுக்கு அனுகூலத்தை ஏற்படுத்துவது சரியா? அவ்வாறு கூடுதலாக வழங்கப்படும்மதிப்பெண்கள், எண்ணிக்கையில் அதிகமாக உள்ள மாநிலக் கல்வித் திட்ட மாணவர்களின் நலனைப் பாதிப்பதுமுறயாகுமா?

இதுபற்றியெல்லாம் ஆராய்ந்து பார்த்து மாற்று நடைமுறைகளையும், விதிமுறைகளையும் வகுக்க வேண்டும்.சட்டசபைக் கூட்டம் இன்று ஒரு நாள் நடைபெறுகிறது. எனவே தகுந்த திருத்தங்களைக் கொண்டு வந்து சட்டத்தைநிறைவேற்ற வேண்டும் என்று கூறியுள்ளார் ராமதாஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+