எந்தக் கட்சியிலும் இனி சேர மாட்டேன்: சரத்

Subscribe to Oneindia Tamil

திருநெல்வேலி:இனி எந்த அரசியல் கட்சியிலும் நான் சேர மாட்டேன் என்று நடிகர் சரத்குமார் கூறியுள்ளார்.

திமுகவில் எம்.பியாக சுமார் 10 ஆண்டுகாலம் இருந்த சரத்குமார், கடந்த சட்டசபைத் தேர்தலுக்கு முன்பாகதிமுகவிலிருந்து விலகி அதிமுகவில் சேர்ந்தார். சமீபத்தில் அதிலிருந்தும் ராஜினாமா செய்து விட்டார்.

சரத்குமார் நாடார் சங்கங்களின் ஒத்துழைப்புடன் புதிய அரசியல் கட்சியைத் தொடங்கப் போவதாக செய்திகள்அடிபடுகின்றன. இந்த நிலையில், மனைவி ராதிகாவுடன் சரத்குமார் நாகர்கோவிலில் ஒரு கல்யாண நிகழ்ச்சியில்கலந்து கொள்ள வந்தார்.

நாகர்கோவில் வரும் வழியெங்கும் ரசிகர் மன்றங்கள் சார்பில் சரத்குமாருக்கு வரவேற்பு கொடுக்கப்பட்டது.நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் சரத்குமார் பேசுகையில், நடிகர் சங்க வளாகத்தில் நிரந்தர வருமானம் தரும்வகையில் பிரமாண்டமான கட்டடம் கட்டப்படவுள்ளது. ஏப்ரல் அல்லது மே மாதம் இதற்கான அடிக்கல்நாட்டப்படும். 18 மாதங்களில் கட்டடம் கட்டி முடிக்கப்படும்.

நடிகர் சங்கத்திடம் தற்போது ரூ. 1.62 கோடி கையிருப்பு உள்ளது. இதை அப்படியே வைத்துக் கொண்டு கலைநிகழ்ச்சிகள் மூலம் பணம் திரட்டி கட்டடம் கட்டப்படும். கலை நிகழ்ச்சிகளை மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்காஉள்ளிட்ட நாடுகளில் நடத்தக் கோரி பலரும் எங்களை அணுகியுள்ளனர்.

நான் அரசியல் தொடர்பாக இனிமேல் எந்த முடிவு எடுத்தாலும் நல்லவர்களிடம் கலந்து ஆலோசித்துவிட்டுத்தான் எடுப்பேன். குறிப்பிட்ட சமுதாயத்திற்கு நான் தலைமை தாங்க வேண்டும் என அழைப்புகள்வருகின்றன. அவர்களது நல்ல எண்ணம் எனக்குப் புரிகிறது.

இனிமேல் எந்த அரசியல் கட்சியிலும் சேர மாட்டேன். இதை தீர்க்கமாகவே முடிவு செய்து விட்டேன் என்றார்சரத்குமார்.

முன்னதாக வள்ளியூரில் நடந்த ரசிகர் மன்ற வரவேற்பின்போது சரத்குமார் பேசுகையில், நான் நாணல் போலவளைந்து கொடுப்பவன். எங்கு, எப்படி, வளைந்து கொடுப்பது என்பது எனக்குத் தெரியும். நான் யாரையும் நம்பிஇல்லை, மக்களை மட்டுமே நம்பியுள்ளேன்.

10 ஆண்டுகாலம் ஒரு கட்சியில் இருந்தேன். 6 மாத காலம் இன்னொரு இயக்கத்தில இருந்தேன். நான் இயக்கம்மாறுவதற்காக ரூ. 20 கோடி பணத்தை வாங்கியதாக சிலர் கூறினார்கள். இப்போது அந்த இயக்கத்தை விட்டுவெளியேறிய பின்னர் அந்தப் பணத்தைத் திருப்பிக் கொடுத்து விட்டதாகவும் கூறுகிறார்கள் என்றார் சரத்குமார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+