பிளஸ்டூ: இனி 30 மார்க் எடுத்தாலே பாஸ்
சென்னை:பிளஸ்டூ வகுப்பில், இயற்பியல், வேதியியல், உயிரியல் உள்ளிட்ட செய்முறை தேர்வு உள்ள பாடங்களில்தற்போது உள்ள 40 மதிப்பெண்களுக்குப் பதில் 30 மதிப்பெண்கள் எடுத்தால் போதும் என தமிழக கல்வித்துறைமுடிவு செய்துள்ளது.
உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, கல்வித்துறைசெயலாளர் கணேசன், பள்ளிக் கல்வித்துறை செயலாளர் குற்றாலிங்கம், அரசுத் தேர்வுத் துறை இயக்குநர்ஜெகநாதன் ஆகியோர் கலந்து கொண்ட கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடந்தது.
இக்கூட்டத்தில் நுழைவுத் தேர்வை அரசு ரத்து செய்துள்ள நிலையில் பிளஸ் டூ தேர்வை எப்படி நடத்துவது என்பதுகுறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தின்போது பல்வேறு ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டு தங்களது கருத்துக்களைத் தெரிவித்தனர்.
இந்தக் கூட்டத்தின் இறுதியில் எடுக்கப்பட்ட முடிவுகள்:
இயற்பியல், உயிரியல், வேதியியல், கணிதம் ஆகிய நான்கு பாடத் தேர்வுகளுக்கும் தேர்வுக்கண்காணிப்பாளர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் சென்று பணியில் ஈடுபடுவர்.
கிராமப்புற மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, இயற்பியல், வேதியியல், உயிரியியல் உள்ளிட்ட செயல்முறைத் தேர்வுகள் உள்ள பாடங்களில் தற்போது மொத்தம் உள்ள 150 மதிப்பெண்களில் குறைந்தது 40மதிப்பெண்கள் எடுத்தால்தான் தேர்ச்சி என உள்ளது. அதை 30 மதிப்பெண்களாக குறைக்க தீர்மானிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications