ப்ளூ பார்க்கும் வாத்தியார்: ஆசிரியை புகார்

Subscribe to Oneindia Tamil

சென்னை:சென்னை அருகே பள்ளிக்கரணையில் உள்ள தனியார் மேல் நிலைப்பள்ளி ஆசிரியர்ஆபாசப் படம் பார்த்து, தன்னிடம் குறும்பு செய்ததாக அதே பள்ளியில் வேலைபார்த்த ஆசிரியை பள்ளிக் கல்வித்துறை அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார்.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட ஆசிரியை உமா மகேஸ்வரி (32), பள்ளிக்கல்வித்துறைக்கு அனுப்பியுள்ள புகாரில் கூறியிருப்பதாவது:

கடந்த நான்கு ஆண்டுகளாக இப்பள்ளியில் நான் வேலை பார்த்து வந்தேன். அதேபள்ளியில் ஆசிரியராக சுந்தரராஜன் (51) என்பவர் வேலை பார்த்து வருகிறார்.

இவரது நடவடிக்கைகள் படு மோசமாக இருக்கும். பள்ளிக்கூட கம்ப்யூட்டரில்ஆபாசப் படத்தைப் போட்டுப் பார்த்துக் கொண்டிருப்பார். ஒரு நாள் நான் பாடநேரத்தில் கம்ப்யூட்டர் வகுப்பு கதவு பூட்டப்பட்டு இருந்ததால் சந்தேகமடைந்துகதவைத் திறந்தபோது, அங்கு அவர் ஆபாசப் படத்தைப் பார்த்துக் கொண்டிருந்ததைஅறிந்து திடுக்கிட்டுப் போனேன்.

இதையடுத்து என்னைத் தனியாக அழைத்த அவர் இதுகுறித்து யாரிடமாவதுசொன்னால் அவ்வளவுதான், தொலைத்து விடுவேன் என மிரட்டினார். எனவே நானும்பயந்து போய் சொல்லவில்லை. சில நாட்கள் கழித்து நான் வகுப்பறையில் தனியாகஇருந்தபோது, அங்கு வந்து என்னிடம் அசிங்கமாக பேசி குறும்புகள் செய்தார்.

இதையடுத்து பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் அவர் மீது புகார் கொடுத்தேன்.ஆனால் நடவடிக்கை எதுவும் இல்லை. இந்த நிலையில், சுந்தரராஜன் அவரதுவகுப்பறையில் விட்டு விட்டுப் போன ஆபாச விசிடியை மாணவர்கள் எடுத்து வந்துஎன்னிடம் கொடுத்தனர்.

இதனால் அதிர்ந்து போன நான், தலைமை ஆசிரியையிடம் புகார் செய்தேன். ஆனால்பள்ளி நிர்வாகம் சுந்தரராஜனை கண்டுகொள்ளவில்லை. அதற்கு மாறாக, என்னிடம்யாரும் பேசக் கூடாது என மற்ற ஆசிரியைகளுக்கு உத்தரவிட்டனர். நான் என்னவேலை செய்தாலும அதை குறை கூற ஆரம்பித்தனர்.

ஒரு கட்டத்தில் என்னைத் தனிமைப்படுத்தினர். நான் கல்வித்துறையில் புகார்கொடுக்கப் போகிறேன் என்றதும் கொலை மிரட்டல் கூட விடுக்கப்பட்டது. இதனால்நான் வேலையை விட்டே நின்று விட்டேன்.மாணவர்களின் எதிர்காலத்தை பாழாக்கும் வகையில் நடந்து கொள்ளும் சுந்தரராஜன்மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார் உமா மகேஸ்வரி.

மாணவிகளிடம் ஆசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுப்பதாக புகார்கள் வந்துகொண்டுள்ள நிலையில், சக ஆசிரியர் மீது ஆசிரியையே புகார் கொடுத்திருப்பதுபரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+