பெரியார் சிலையை உடைப்பு- 4 பேர் கைது

Subscribe to Oneindia Tamil

திருச்சி:ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு முன் வைக்கப்பட்டிருந்து பெரியார் சிலை இன்று காலை இந்து மக்கள்கட்சியை சேர்ந்த 4 பேர் உடைத்தனர். அவர்களை போலீசார் விரட்டி சென்று கைது கைது செய்தனர்.

கடந்த 1976ம் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் முன்பு சுமார் 100 அடி தூரத்தில் பெரியார் சிலை அமைக்கதிராவிடர் கழகம் முடிவு செய்தது. இதற்கு இந்து மக்கள் கட்சி சார்பில் எதிர்ப்பு தெரிவித்து மதுரைஉயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

ஆனால், இந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து திராவிடர் கழகத்தினர் பெரியார் சிலைஅமைக்கும் ஏற்பாடுகளை செய்தனர். கோவிலின் முன்பு 100 அடி தூரத்திலுள்ள காவல் நிலைத்தின் எதிரில்திகவினர் சார்பில் கடந்த 23ம் தேதி பீடம் அமைக்கப்பட்டது.

இந்த பீடத்தின் மேலே கடந்த 29ம் தேதி 8 அடி உயர பெரியார் சிலை வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்துசிலை திறப்பு விழா வரும் 9ம் தேதி (சனிக்கிழமை) நடத்தப்படும் என்றும் சிலையை அமைச்சர்கள் கே.என்.நேரு,செல்வராஜ் முன்னிலையில் தி.க. தலைவர் கி.வீரமணி திறந்து வைப்பார் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று அதிகாலை 4.45 மணியளவில் 4 பேர் சிலையை சுத்தியலால் உடைத்தனர். இதில் சிலையின்கழுத்து பகுதி துண்டானது. சிலை உடைக்கும் சத்தம் கேட்டதும் அருகில் இருந்து போலீசார் ஓடிவந்தனர்.

போலீசாரை கண்டதும் சிலையை உடைத்து கொண்டிருந்த 4 பேரும் தம்பி ஓட முயன்றனர். ஆனால் அவர்களைபோலீசார் விரட்டி பிடித்தனர். பின்னர் அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்திய போது அவர்கள் 4 பேரும்கோவையை சேர்ந்தவர்கள் என்றும், இந்து மக்கள் கட்சியை சேர்ந்தவர்கள் என்றும் தெரிய வந்தது.

சிலை உடைக்கப்பட்ட தகவல் அறிந்ததும் திகவினர் அங்கு திரண்டனர். சிலை திறப்புக்கு இன்னும் இரண்டுநாட்களே உள்ள நிலையில் சிலை உடைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை எற்படுத்தியுள்ளது.இதனால் இப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்ப்பட்டுள்ளனர்.

4 போலீசார் சஸ்பெண்டு:

இதற்கிடையில் சிலை உடைப்பை தடுக்காத, பணியில் கவனக்குறைவாக இருந்த 4 போலீசார் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

பஸ்கள் உடைப்பு:

இச் சம்பவத்தையடுத்து திருச்சியில் பெரும் பதற்றம் நிலவுகிறது. பஸ்கள் மீது கல்வீச்சு நடந்தது. இதில் இரண்டுதனியார் பஸ்களின் கண்ணாடிகள் உடைந்தன.

ஸ்ரீரங்கத்தில் தி.க தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் சமாதானப்படுத்தி கலைந்துபோகச் செய்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+