மாமனார் காம இச்சை சித்திரவதை-பெண் புகார்

Subscribe to Oneindia Tamil

சென்னை:மாமனார் தன்னை காம இச்சையுடன் கொடுமைப்படுத்துவதாகவும், அதைத் தட்டிக் கேட்காமல் மாமியாரும்,கணவரும் தன்னை கொடுமைப்படுத்தி வருவதாகவும் கூறி சென்னை மாநகர காவல்துறை ஆணையர்அலுவலகத்தில் சென்னையைச் சேர்ந்த பெண் புகார் கொடுத்துள்ளார்.

சென்னை பாடி முத்துசாமி காலனியை சேர்ந்து சரஸ்வதி (23). இவருக்கு கடந்த 2002ம் ஆண்டு வேலண்ணாஎன்பவருடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். தனது 2 பெண்குழந்தைகளையும் அழைத்து கொண்டு போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்து கமிஷனரிடம் சரஸ்வதி புகார்ஒன்றைக் கொடுத்துள்ளார்.

அதில், எனது கணவர் வேலண்ணா விழப்புரம் மாவட்டம் மாதவச்சேரி கிராமத்தை சேர்ந்தவர். எங்களுக்குதிருமணம் நடந்த போது எனது கணவர் வேலையில்லாமல் இருந்தார். பின்னர் கத்தார் நாட்டுக்கு சென்றுகாண்டிராக்ட் வேலை பார்க்க ஆரம்பித்தார்.

அவர் வேலையில்லாமல் இருந்த போது என்னை சந்தோசமாக வைத்திருந்தார். ஆனால் அவர் நிறைய சம்பாதிக்கஅரம்பதித்ததில் இருந்து. என்னை உதாசீனப்படுத்தினார். எனது மாமனார், மாமியாருக்கு என்னை ஆரம்பத்தில்இருந்தே பிடிக்கவில்லை.

எனது வீட்டில் 12 பவுன் நகை வரதட்சனையாக கொடுத்தனர். அது போதாது என்று மேலும் 30 பவுன் நகைவாங்கி வரவேண்டும் என்று எனது மாமியார் கொடுமைப்படுத்தினார்.

என் மாமனாரோ, என்னை அடைய நினைத்தார். கணவர் வெளிநாட்டு வேலைக்கு போன பிறகு என்னிடம் உறவுகொள்வதற்காக என்னை வற்புறுத்தி, துன்பப்படுத்தினார். எனது மூத்த மகள் 9 மாதம் வயிற்றில் இருந்த போது,தனது காமவெறி தலைக்கேற என்னிடம் தவறாக நடக்க முயன்றார். இதுகுறித்து என் கணவ>டம் கூறிய போதுஇதை பெரிதுபடுத்த வேண்டாம். பிடிக்கவில்லை என்றால் பெற்றோர் வீட்டில் போய் இருந்து கொள் என்றுகூறினார்.

எனது மாமனாரின் செக்ஸ் தொல்லைக்கும், மாமியாரின் வரதட்சனை கொடுமைக்கும் பயந்து நான் எனதுபெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டேன். எனது கணவர் வரும் போது மட்டும் அவரோடு போய் இருந்து வந்தேன்.எனத்து 2 பெண்குழந்தைகள் பிறந்தன. 2 பெண் குழந்தைகள் பிறந்த பிறகு எனது கணவரின் ஆலோசனைப்படிநான் குடும்ப கட்டுபாடு செய்து கொண்டேன்.

இந் நிலையில் எனது எனது மாமியார் ஆண் குழந்தை வேண்டும் என்று கருதி என் கணவருக்கு ஜாதகம்பார்த்தார். அப்போது அவருக்கு 2வது திருமணம் செய்து வைத்தால் ஆண் குழந்தை பிறக்கும் என ஜாதகம்பார்த்த நபர் கூறினார். இதனால் என் கணவர் போக்கில் மாறுதல் ஏற்பட்டது.

இனியும் பெற்றோர் வீட்டில் இருந்தால் வாழ்க்கை போய்விடும் என கருதி எனது மாமியார் வீட்டுக்கு சென்றேன்.அங்கு அவர்கள் என்னை வரதட்னை கேட்டு கொடுமை பாடுத்தினர். என் மாமனார் இரவு நேரங்களில் செக்ஸ்தொல்லைகள் கொடுத்தார். அவருக்கு உடன்படாவிட்டால் என்னை வாழாவெட்டியாக்கி விடுவேன் என்றும்மிரட்டினார்.

இந் நிலையில் சில தினங்களுக்கு முன் எனது கணவர் வெளிநாட்டில் இருந்த திரும்பி வந்தார். என்னையும் என்குழந்தைகளையும் ஏமாற்றி பெற்றோர் வீட்டுக்கு அனுப்பி வைத்து விட்டு. கடந்த ஞாயிறுக்கிழமை அன்று அவர்அஞ்சுகம் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

என் மாமியார் கொடுமையாலும், மாமனாரின் காம தொல்லையாலும், கணவரால் கைவிடப்பட்ட நிலையிலும்நான் இப்போது 2 குழந்தைகளுடன் வாழ வழியின்றி தவிக்கிறேன். எனவே எனது கணவர், மாமியார். மாமனார்ஆகியோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுகொள்கிறேன் என அதில் கூறியிருந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+