எடிஎப் கொடுமை-இழப்பீடு தர தமிழகம் ஒப்புதல்
டெல்லி:சந்தனக் கடத்தல் வீரப்பன் தேடுதல் வேட்டையின் போது பாதிக்கப்பட்டவர்களுக்கு தேசிய மனித உரிமைஆணைய பரிந்துரைப்படி இழப்பீடு வழங்க தமிழக மற்றும் கர்நாடக அரசு ஒப்புதல் அளித்துள்ளன.
வீரப்பன் தேடுதல் வேட்டையின் போது பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து, தமிழக அரசின்தலைமைச் செயலாளர் திரிபாதி, கர்நாடக கூடுதல் தலைமைச் செயலாளர் ஏகே.அகர்வால், உள்துறை செயலாளர்ராமகிஷ்ணன் ஆகியோர் தேசிய மனித உரிமை ஆணையத்திடம் தங்களது மாநில கருத்துகளை தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பாக நீதிபதி சதாசிவம் கமிவட்டி அளித்த பரித்துரைகள்குறித்து பாதிக்கப்பட்டோர் மற்றும் மாநில அரசுகளிடம் மனித உரிமை ஆணையம் கருத்து கேட்டது. பின்னர்பாதிக்கப்பட்டோர்களின் கருத்துக்கள் தொடர்பாக மாநில அரசுகள் பதில் கருந்துக்களை தெரிவிக்கும்மாறுகேட்டது.
இந்நிலையில் இரு மாநில தலைமைச் செயலாளர்களும் நேரில் வந்து தங்களது கருத்துக்களை மனித உரிமைஆணைய பொறுப்புத் தலைவர் நீதிபதி சிவராஜ் பாட்டீல் முன்னிலையில் கூறினர். பின்னர் ஆணையத்தின்பரிந்துரைப்படி, இழப்பீடு வழங்க அவர்கள் சம்மதம் தெரிவித்தனர்.
அடுத்த பத்து நாள்களுக்குள் ஆணையம் மீண்டும் கூடி ஒவ்வொருக்கும் வழங்க வேண்டிய இழப்பீடு குறித்துமுடிவெடுக்கப்படும். மேலும் சதாசிவம் கமிஷன் அறிக்கையில் 198 பேருக்கு மட்டுமே இழப்பீட்டுக்குபரிந்துரைக்கப்பட்டுள்ளது.
ஆனால் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களது கோரிக்கைகள் குறித்தும் ஆணையம்முடிவெடுக்கும் என்று தெரிகிறது.
இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க கோரி போராட்டம் நடத்தி வந்த இந்திய தேசியமகளிர் சம்மேளத் தலைவர் ஆன்னிராஜா நேற்று சிவராஜ் பாட்டீலைச் சந்தித்து பேசினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், எனது வாழ்க்கையில் இன்று மிகவும் முக்கியமான நாள்.பாதிக்கப்பட்ட மக்களுக்கு இது மிகப் பெரிய வெற்றி என்றார்.
அதிமுக அரசு இருந்தவரை பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு தர சம்மதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications