கேரள முதல்வரை சந்திக்க சிபிஐ முடிவு
தேனி:முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக கேரள முதல்வர் அச்சுதானந்தனை சந்தித்துப் பேச இந்தியகம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலக் கிளை முடிவு செய்துள்ளது.
தேனியில் நடந்த பொதுக் கூட்டத்தில் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் பேசுகையில், முல்லைப்பெரியாறு அணையின் உயரத்தை 142 அடியாக உயர்த்த உச்சநீதிமன்றம் அனுமதி அளித்து விட்டது. ஆனால்இதை அமல்படுத்தவதற்கு கேரள அரசு மறுப்பது இந்திய இறையாண்மைக்கு எதிரானது. தேசியஒருமைப்பாட்டை சீர்குலைக்கும் நடவடிக்கையாகும்.
தமிழகத்திலிருந்துதான் கேரளாவுக்கு தினசரி காய்கறிகள், பால், இறைச்சிக்கான மாடுகள், பூக்கள் உள்ளிட்டவைகொண்டு செல்லப்படுகின்றன. ஆனால் இயற்கை கொடுத்த நீரை கொடுக்க மறுப்பது நியாயமற்ற செயல்.
தமிழக மக்களை அவமதிக்கும் வகையில் கேரள முதல்வர் அச்சுதானந்தன் பேசியுள்ளார். இது வன்மையாககண்டிக்கத்தக்கது. அணை பலமாக உள்ளது என்று மத்திய அரசு அனுப்பிய நிபுணர்கள் குழுவின் அறிக்கையின்அடிப்படையில்தான் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
இந்தப் பிரச்சினை தொடர்பாக கேரள முதல்வர் மற்றும் அங்குள்ள அரசியல் கட்சியினரை சந்தித்து தமிழகத்தின்உரிமையை நிலை நாட்டும் வகையில் ஆக்கப்பூர்வமான பேச்சு நடத்தி தீர்வு காண கேரளாவை நாங்கள்வலியுறுத்தவுள்ளோம் என்றார் பாண்டியன். ‘
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications