பிலிப்பைன்ஸ் சூறாவளி: இந்தியா நிதியுதவி

Subscribe to Oneindia Tamil

டெல்லி:சூறாவளியால் பெரும் உயிர் சேதம் மற்றும் பொருட் சேதத்தை சந்தித்தள்ள பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு இந்தியா2.5 லட்சம் டாலர் உதவியை அறிவித்துள்ளது.

கிழக்கு பிலிப்பைன்ஸில் வீசிய பயங்கர சூறாவளிக் காற்றால் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.பல லட்சம் அளவுக்கு பொருட் சேதம் ஏற்பட்டுள்ளது. வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி பல நூறு பேர்காணாமல் போயுள்ளனர்.

இந்த நிலையில், பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு இந்தியா உதவிக் கரம் நீட்டியுள்ளது. இதுகுறித்து வெளியுறவுத் துறைசெய்தித் தொடர்பாளர் நவ்தேஜ் சர்னா கூறுகையில், பிலிப்பைன்ஸ் நாட்டின் துயரத்தில் இந்தியா ஆழ்ந்தகவலையுடன் பங்கு கொள்கிறது.

இந்த இக்கட்டான நேரத்தில் பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு 2.5 லட்சம் அமெரிக்க டாலர் உதவியை இந்தியாவழங்கும். இதன் மூலம் கிழக்கு பிலிப்பைன்ஸ் பகுதியில் நடந்து வரும் சீரமைப்புப் பணிகளுக்கு ஊக்கம்கிடைக்கும் என்றார்.

வருகிற 11ம் தேதி முதல் 13ம் தேதி வரை பிரதமர் மன்மோகன் சிங் பிலிப்பைன்ஸ் நாட்டில் சுற்றுப்பயணம்செய்யவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+