3வது அணி: டெல்லியில் ஜெ படு தீவிர முயற்சி
டெல்லி:தேசிய அளவில் 3வது அணி அமைக்க அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா எடுத்து வரும் முயற்சிகளால்டெல்லி அரசியல் வட்டாரத்தில் லேசான கலக்கம் தோன்ற ஆரம்பித்துள்ளது.
சிறிது காலத்திற்கு முன்பே மூன்றாவது அணி அமைப்பது தொடர்பாக கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட சில கட்சிகள்தன்னை அணுகியிருப்பதாக பரபரப்பாக அறிவித்தார் ஜெயலலிதா. ஆனால் அப்படியெல்லாம்முயற்சிக்கவில்லை, முயற்சித்தாலும் அதில் அதிமுக இருக்காது என்று கூறி ஜெயலலிதாவை கடுப்பாக்கிவிட்டனர்கம்யூனிஸ்டுகள்.
ஆனாலும் ஜெயலலிதா தனது முயற்சிகளை கைவிடவில்லை. தெலுங்கு தேசம், சமாஜ்வாடி, தேவே கெளடாவின்மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகளை தன் பக்கம் இழுக்கும் முயற்சிகளை ஆரம்பித்தார். இதில்முழுமையாக ஜெயலலிதாவுக்கு ஆதரவாக வந்திருப்பது சமாஜ்வாடிக் கட்சிதான்.
எம்.ஜி.ஆர். சிலை திறப்புக்காக டெல்லி சென்றிருந்த ஜெயலலிதா, சமாஜ்வாடிக் கட்சியின் தலைவர் அமர்சிங்வீட்டுக்கும் சென்றார். அங்கு வைத்து உ.பி. முதல்வரும், சமாஜ்வாடிக் கட்சியின் நிறுவனருமான முலாயம் சிங்யாதவை சந்தித்து 3வது அணி குறித்து முக்கிய விவாதம் நடத்தினார்.
உ.பியில் விரைவில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. அதற்கு முன்பாக 3வது அணியை அமைத்து விடமுலாயம் ஆர்வமாக உள்ளார். மேலும், உ.பி. மாநிலத் தேர்தல் பிரசாரத்திற்கும் ஜெயலலிதாவையும் அவர்அழைத்துள்ளார். அதற்கு ஜெயலலிதாவும் ஒப்புக் கொண்டுள்ளாராம்.
சமாஜ்வாடியைப் போல தெலுங்கு தேசமும் 3வது அணிக்கு வரும் எனத் தெரிகிறது. இதுதொடர்பாகநாடாளுமன்ற தெலுங்கு தேச தலைவர் எர்ரான் நாயுடு மூலம் சந்திரபாபு நாயுடுவுடன் ஆலோசனைநடத்தியுள்ளார் ஜெயலலிதா. எம்.ஜி.ஆர். சிலை விவகாரம் தொடர்பாக சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜிதலைமையிலான குழு விவாதத்தின்போது தீவிரமாக குரல் கொடுத்தார் எர்ரான் நாயுடு என்பதுநினைவிருக்கலாம்.
இந்த 3வது அணியில் தற்போது அஸ்ஸாம் கண பரிஷத் கட்சியும், கெளடாவும் இணையக் கூடும். மாநிலஅளவில் பாஜகவுடன் கூட்டணி வைத்து தனது மகன் குமாரசாமியை முதல்வராக்கிய கெளடா, தேசிய அளவில்மூன்றாவது அணிக்கு தயாராகவே இருக்கிறார்.
எம்ஜிஆர் சிலை திறப்புக்குப் பின்னர் இந்தத் தலைவர்களுக்கு ஜெயலலிதா ஹோட்டல் மெளரியாவில்பிரமாதமான விருந்து கொடுத்து அசத்தி விட்டார். இந்த விருந்து நிகழ்ச்சியில் மதிமுக பொதுச் செயலாளர்வைகோ, 3வது அணியில் பங்கேற்கவுள்ள கட்சிகளின் தலைவர்கள், அதிமுக எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள்உள்ளிட்டோரும் பங்கு கொண்டனர்.
அய்யர் மூலம் காங்.கை கவர முயற்சி:
3வது அணிக்கு ஒருபுறம் முயற்சித்துக் கொண்டுள்ள நிலையில், மறுபுறம் காங்கிரஸ் கட்சியையும் தன் பக்கம்இழுக்க ஜெயலலிதா தீவிர முயற்சி மேற்கொண்டிருப்பதாக தெரிகிறது.
ஜெயலலிதாவுக்கு முன்பு மிக நெருக்கமாக இருந்த காங்கிரஸ் தலைவர்களில் ஒருவர் மணிசங்கர அய்யர் மூலம்இந்த முயற்சிகளை ஜெயலலிதா தொடங்கியிருப்பதாக கூறப்படுகிறது. அய்யரை கும்பகோணம் அருகேஓ.எஸ்.மணியனை விட்டு அடியைக் கொடுத்தார் ஜெயலலிதா என்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் அய்யர்-ஜெஇடையிலான நட்பு முழுவதுமாக பட்டுப்போய் விடவில்லை.
சமீபத்தில் அதிமுகவின் அதிகாரப்பூர்வ ஏடான நமது எம்ஜிஆரில் அய்யரை ஏகத்துக்கும் பாராட்டி ஒரு கட்டுரைவெளியாகியிருந்தது. அய்யர்-ஜெ மோதல்கள் எல்லாம் வெளியில் தான், உள்ளுக்குள் நட்புடனே இருக்கிறார்கள்என்பதை அந்த கட்டுரை உறுதி செய்தது.
அடுத்த மக்களவைத் தேர்தலின்போது திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸை வெளியே இழுத்து அதிமுகவுடன்ஐக்கியப்படுத்தும் பிரம்மப் பிரயத்தனத்தில் அய்யர் தீவிரமாக இறங்கியுள்ளாராம். அவரது யோசனைப்படிதான்சோனியாவுக்கு எம்ஜிஆர் சிலை திறப்பு விழா அழைப்பு அனுப்பப்பட்டதாம்.
ஆனால் சோனியாவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஜெயலலிதா மீதான கசப்புணர்வு போகவே இல்லையாம்.இதனால் ஜெயலலிதா-காங்கிரஸ் கூட்டணிக்கு வாய்ப்பே இல்லை என திமுக நம்பிக் கொண்டிருக்கிறது.
ஜெ. விமானத்தில் கோளாறு:
இதற்கிடையே, டெல்லியில் இருந்து சென்னை புறப்பட்ட ஜெயலலிதாவின் தனி விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்த போது என்ஜினில் கோளாறு ஏற்பட்டதால் மீண்டும் டெல்லி விமான நிலையத்தில்தரையிறக்கப்பட்டது.
டெல்லியில் எம்ஜிஆர் சிலை திறப்பு முடிந்து நேற்று பகல் 1.30 மணிக்கு தோழி சசிகலாவுடன் ஜெயலலிதா தனிவிமானம் மூலம் சென்னைக்குக் கிளம்பினார். விமானம் பறந்து கொண்டிருந்த போது என்ஜினில் கோளாறுஏற்பட்டுள்ளதை கண்ட பைலட், டெல்லி விமான கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார்.
உடனே டெல்லி திரும்புமாறு கட்டுப்பாட்டு அறை அறிவுறுத்தியது. இதையடுத்து டெல்லி விமான நிலையத்தில்விமானம் மீண்டும் தரையிறக்கப்பட்டது. இதையடுத்து அந்த விமானத்தை ரத்து செய்த ஜெயலலிதா இரவுஏர்ஜெட் விமானம் மூலம் சென்னை வந்து சேர்ந்தார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications