சோனியா மானமுள்ளவர்-ஜெவுக்கு கருணாநிதி சூடு
டெல்லி:சோனியா காந்தியைப் பற்றி ஜெயலலிதா பேசிய பேச்சுக்கு, அவர் எப்படி எம்ஜிஆர். சிலை திறப்பு விழாவில்கலந்து கொள்வார் என முதல்வர் கருணாநிதி கேள்வி கேட்டார்.
மறைந்த மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் சிலை நாடாளுமன்ற வளாகத்தில் இன்று திறக்கப்படுகிறது.இதற்காக முதல்வர் கருணாநிதி நேற்று இரவு டெல்லி வந்தார். விமான நிலையத்தில் அவருக்கு மத்தியஅமைச்சர்கள் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன், பழனிமாணிக்கம் உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர்.
மேலும், திமுக தொண்டர்கள் பெருமளவில் கூடி, மேள தாளம் முழங்க கருணாநிதியை வரவேற்றனர். பின்னர்செய்தியாளர்களிடம் கருணாநிதி பேசுகையில்,
தேர்தல் நேரத்தில் தமிழகத்தில் மேடை தோறும் சோனியா காந்தியை சரமாரியாக திட்டி விட்டு, இப்போது சிலைதிறப்புக்கு வாருங்கள் என்று கூப்பிட்டால் யார்தான் வருவார்கள்? ஜெயலலிதா பேசிய பேச்சுக்குமானமுள்ளவர்கள் யாரும் வர மாட்டார்கள்.
எம்.ஜி.ஆர் சிலை திறக்க எனது குறுக்கீடுதான் காரணம் என ஜெயலலிதா குற்றம் சாட்டிப் பேசியிருப்பது அவதூறுவழக்குப் போடுவதற்குரிய வாசகம். எம்.ஜி.ஆர். சிலை திறப்பு விழாவில் சோனியா, பிரதமர்மன்மோகன்சிங் ஆகியோர் வராததற்கு நான் காரணமல்ல.
ஜெயலலிதா பேசிய பேச்சுக்கு மான, ரோசமுள்ள எவரும் வரமாட்டார்கள். தேர்தல்காலத்தில் சோனியாவைப் பற்றி பேசிய பேச்சுக்களை மறக்க முடியுமா?
முல்லைப் பெரியாறு விவகாரத்தில் 142 அடி வரை நீரைத் தேக்கலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தபோதுஆட்சியில் இருந்தவர் ஜெயலலிதாதான். எனவே பொன்னான வாய்ப்பை தவற விட்டது நாங்கள் அல்ல,ஜெயலலிதாதான்.
இப்பிரச்சினையில் அடுத்த கட்டமாக பொறியாளர்கள், இலாகா அமைச்சர்கள் சந்தித்துப் பேசவுள்ளனர். அவர்கள்தரும் தகவல்களின் அடிப்படையில் அடுத்த கட்ட பேச்சுக்கு ஏற்பாடுகள் செய்யப்படும். பேச்சுவார்த்தை பலன்தராவிட்டால் உச்சநீதிமன்றத்தை நாடுவோம்.
வாய்ப்பு கிடைத்தால் பிரதமரைச் சந்தித்து இந்தப் பிரச்சினை தொடர்பாக பேசுவேன் என்றார் கருணாநிதி.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications