இலங்கை கடற்படைக்கு இந்திய வெடிபொருள்:மதுரை அருகே போலீஸ் மடக்கியது!
மதுரை:இலங்கை கடற்படைக்கு, மகாராஷ்டிர மாநிலம் நாக்பரிலிருந்து வெடிபொருட்களைஏற்றிக் கொண்டு வந்த லாரியை மதுரை அருகே போலீஸார் மடக்கினர். ஆனால் உரியஆவணங்களுடன் அந்த வெடிபொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டதால், போலீஸார்அதை அனுமதித்தனர்.
ஈழப் பிரச்சினை உக்கிரமடைந்து வருகிறது. விடுதலைப் புலிகளுக்கும், இலங்கைபடையினருக்கும் இடையே மோதல்கள் அதிகரித்து வருகின்றன. இந்த மோதலில்,அப்பாவித் தமிழர்கள் பலர் பலியாகி வருகின்றனர்.
புலிகளைத் தாக்குகிறோம் என்று கூறிக் கொண்டு அப்பாவித் தமிழர்களைவிமானப்படையாலும், ராணுவத்தாலும் தாக்கி அழித்து வருகிறது இலங்கை அரசு.இதனால் இலங்கைக்கு ராணுவ ரீதியிலான எந்த உதவியையும் இந்தியா செய்யக்கூடாது, ராணுவ ஒப்பந்தம் போடக் கூடாது, பாக் ஜலசந்தியில் இலங்கைகடற்படையுடன் இணைந்து கூட்டு ரோந்து செல்லக் கூடாது என்று தமிழகத்தைச்சேர்ந்த அனைத்துக் கட்சிகளும் கோரி வருகின்றன.
இதுதொடர்பாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பிரதமர் மன்மோகன் சிங்கைநேரில் சந்தித்தும் கோரிக்கை விடுத்தார். தமிழகக் கட்சிகளின் நெருக்குதலைத்தொடர்ந்து இலங்கைக்கு ராணுவ ரீதியிலான உதவிகள் அளிக்கப்பட மாட்டாது,ஆயுதங்கள் வழங்கப்பட மாட்டாது என மத்திய அரசு தெளிவுபடுத்தியது.
ஆனால் மத்திய அரசின் உத்தரவாதத்தை மீறி, இலங்கை கடற்படைக்குவெடிபொருட்கள் அனுப்பப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மதுரை மாவட்டம் மேலூர் அருகே நெடுஞ்சாலை ரோந்துப் பிரிவு போலீஸார் ஒருலாரியின் மீது சந்தேகமடைந்தனர்.
உடனடியாக அந்த லாரியை நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது அந்த லாரியில் 40பெட்டிகளில் வெடிமருந்துகள், டெட்டனேட்டர், கேப் உள்ளிட்ட ரூ. 4 லட்சம்மதிப்புள்ள வெடிபொருட்கள் இருந்தன.
இந்த வெடிபொருட்கள் குறித்த ஆவணங்களை டி.எஸ்.பி. மாறனிடம் கொடுத்தார்.அதை வாங்கிப் பார்த்தபோது, நாக்பூரில் உள்ள சோலார் எக்ஸ்புளோசிவ்நிறுவனத்திலிருந்து இந்த வெடிபொருட்கள், இலங்கை கடற்படையினருக்காகஅனுப்பப்படுவதாக அந்த ஆவணங்கள் மூலம் தெரிய வந்தது.
தூத்துக்குடியிலிருந்து கடல் மார்க்கமாக இந்த வெடிபொருட்கள் இலங்கைக்குஎடுத்துச் செல்லப்படுவதாகவும் போலீஸாரிடம் தெரிவிக்கப்பட்டது. உரியஆவணங்கள் காட்டப்பட்டதால், போலீஸார் அந்த வெடிபொருள் லாரியை தொடர்ந்துசெல்ல அனுமதித்தனர்.
இலங்கையில் உள்ள ரக்சமா-வல்சாரா கடற்படை வெடிபொருள் கிடங்கின்முகவரிக்கு இந்த வெடிபொருட்கள் அனுப்பப்பட்டுள்ளன. இலங்கைக்குஎந்தவகையான ஆயுத உதவியும் செய்யக் கூடாது என்று தமிழக கட்சிகள் வலியுறுத்திவரும் நிலையில், இந்தியாவிலிருந்து இலங்கை கடற்படைக்கு வெடிபொருட்கள்அனுப்பப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications