இரட்டைப் பதவி சர்ச்சை: தப்பினார் அன்புமணி
டெல்லி:ஆதாயம் தரும் பதவியை மத்திய சுகாதார அமைச்சர் அன்புமணி ராமதாஸ் வகிக்காததால் அவரது பதவியைபறிக்க முடியாது என தேர்தல் ஆணையம் கூறி விட்டது. இதனால் எம்.பி பதவி பறிபோகும் அபாயத்திலிருந்துஅவர் தப்பினார்.
மத்திய அமைச்சர் அன்புமணி, அகில இந்திய மருத்துவ விஞ்ஞான கழக தலைவர் பதவியையும் வகித்துவருகிறார். ஆதாயம் தரும் பதவியை அன்புமணி வகித்து வருவதால் அவரது எம்பி பதவியைப் பறிக்கவேண்டும் என கூறி முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி உமேஷ் செகால் என்பவர் குடியரசுத் தலைவர் அப்துல் கலாக்குமனு அனுப்பினார்.
இந்த மனுவை தேர்தல் ஆணையத்துக்கு குடியரசுத் தலைவர் மாளிகை அனுப்பி வைத்தது. இந்த மனுவைப்பரிசீலித்த தேர்தல் ஆணையம், அன்புமணி மற்றும் செகாலை நேரில் அழைத்து விளக்கம் கேட்டது. இதைத்தொடர்ந்து தற்போது செகாலுக்கு தேர்தல் ஆணையம் பதில் அனுப்பியுள்ளது.
அதில், அமைச்சர் அன்புமணி வகித்து வரும் பதவியை ஆதாயம் தரும் பதவியாக கருத முடியாது. மத்தியசுகாதாரத் துறை அமைச்சராக இருப்பவர்தான் அகில இந்திய மருத்துவ விஞ்ஞானக் கழகத்தின் தலைவராகஇருக்க முடியும். எனவே அவரது எம்பி பதவியை ரத்து செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் எம்பி பதவி பறிபோகும் அபாயத்திலிருந்து அன்புமணி தப்பியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications