பெரியார்: யாராலும் தடுக்க முடியாது-வீரமணி
திருச்சி:ஸ்ரீரங்கத்தில் பெரியாரின் சிலை திறப்பை யாராலும் தடுக்க முடியது என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணிகூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஸ்ரீரங்கத்தில் பெரியார் சிலையை சேதப்படுத்தியவர்கள் உடனடியாக கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.இதற்கு காரணமாக இருந்தவரிடமும் விசாரணை நடத்து வருகிறது. இது குறித்து முதல்வர் கருணாநிதி காவல்துறையினருக்கு அவசர ஆணை பிரப்பத்துள்ளதால் காவல் துறையினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
இதற்காக முதல்வருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். சிலை உடைப்புக்கு முக்கியகாரணமானவர்களையும் காவல் துறையினர் கைது செய்ய வேண்டும். திட்டமிட்டபடி ஸ்ரீரங்கத்தில் பெரியார்சிலை திறக்கப்படும் அதை யாராலும் தடுக்க முடியாது.
இந்த சம்பவத்திற்கு பதிலடி கொடுக்கம் வகையில் ஊருக்கு ஊர் பெரியார் சிலைகள் திறக்கப்பட வேண்டும்.பெரியாரின் கொள்கை பரவாத ஊர் இல்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும். வீதி எங்கும் பெரியாரின்படிப்பகங்கள் தோன்ற வேண்டும், ஆத்திரப்படுவதை விட அறிவார்ந்த பாதையே பலன் அளிக்கும் என்றுகூறியுள்ளார்.
பாமக கண்டனம்:
இதுதொடர்பாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பெரியார், தனிப்பட்டவர் அல்ல. அவர், தமிழ்நாட்டின், தமிழ் மக்களின் சொத்து. அவர்களது தன்மானத்தின்பிரதிநிதி. அவரது சிலை மீது நடத்தபட்டிருக்கும் தாக்குதல் தமிழர்களின் தன்மானத்தின் மீது நடத்தப்பட்டிருக்கும்தாக்குதல் என்பதில் சந்தேகம் இல்லை. இந்த இழி செயலில் ஈடுபட்ட தீய சக்தியைகளை பாமக சார்பில்வன்மையாக கண்டிக்கிறோம்.
தலைவர்களின் சிலையை சேதப்படுத்துவகிறவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது தயவு தாட்சணயின்றிகாவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
இந்திய கம்யூ. கண்டனம்:
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் தா.பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், இது தமிழகத்தில்நிலவி வரும் சமூக ஒற்றுமையை சீர்குலைக்கவும், சட்டம், ஒழுங்கு பிரச்சனையை கிளப்பி விடவும்,பிற்போக்காளர்கள், வகுப்புவாதிகள் சேர்ந்து செய்துள்ள கேடு கெட்ட செயல்.
இந்தச் செயலை வன்மையாக கண்டிக்கிறோம். இது தொடர்பாக இந்திய கம்யூ. கட்சி சார்பில் கண்டனஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என கூறியுள்ளார்.
தேமுதிக கண்டனம்:
தேமுதிக தலைவர் விஜய்காந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், கால காலமாக இருந்த மூட நம்பிக்கைகளையும்,ஜாதி வேறுபாடுகளில் மூழ்கி கிடந்தவர்களையும் திருத்தும் பணியில் தனது வாழ்நாளை அர்ப்பணித்தவர் தந்தைபெரியார்.
சிறுபான்மையினர் மீது பெரும்பான்மையினர் ஆதிக்கம் செலுத்துவதை எதிர்த்தார். ஆனால் ஒரு நாளும்வன்முறையைக் கையளவில்லை. அமைதி வழியில் போராட்டங்கள் நடத்தி பலமுறை சிறை சென்றுள்ளார்.
ஒட்டுமொத்த சமுதாய மேம்பாட்டுக்காக பாடுபட்டார். மனிதாபிமானமிக்க தலைவர்களுக்கே சிலைவைக்கப்படுகிறது. அந்த சிலையை சேதப்படுத்துவது வகுப்பு ஒற்றுமையை சீர்குலைப்பதாகும். இந்த செயல்செய்தவர்களை தேமுதிக வன்மையாக கண்டிக்கிறது என அவர் கூறியுள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications