ஸ்ரீரங்கத்தில் ராமர் படத்திற்கு தீ வைப்பு
திருச்சி:பெரியார் சிலை உடைக்கப்பட்டதைக் கண்டித்து திருச்சி ஸ்ரீரங்கத்தில் மக்கள் கலை இலக்கியக்கழகம் அமைப்பைச் சேர்ந்தவர் ராமர் படத்திற்கு தீ வைத்து எரித்துப் போராட்டம்நடத்தினர்.
![]() |
| உடைக்கப்பட்ட பெரியார் சிலை |
திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோவில் ராஜகோபுரம் உள்ள பகுதியில்கோவிலுக்கு அருகே முழு உருவப் பெரியார் சிலை நிறுவப்பட்டிருந்தது. இதற்குஇந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்புவந்தன. இந்த சிலை நாளை திறக்கப்படுவதாக இருந்தது.
இந்த நிலையில், நேற்று அதிகாலை பெரியார் சிலையின் சிலையின் கழுத்து பகுதி துண்டானது.இதையடுத்து இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த ஐந்து பேரை போலீஸார் கைதுசெய்தனர். பெரியார் சிலையின் தலை துண்டிக்கப்பட்ட சம்பவம் ஸ்ரீரங்கம் மற்றும்திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.
இந்த நிலையில், நேற்று இரவு மக்கள் கலை இலக்கியக் கழகத்தைச் சேர்ந்த சுமார் 50பேர் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு அருகே கூடினர். கையில் ராமர் படத்தை எடுத்துக்கொண்டு வந்த அவர்கள், அப்படங்களுக்கு தீவைத்து எரித்துப் போராட்டம்நடத்தினர்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக விரைந்து வந்த போலீஸார்ராமர் படத்தை எரித்தவர்களை கைது செய்து காவல் நிலையம் கொண்டு சென்றனர்.பெரியார் சிலை துண்டிப்பு, ராமர் படம் எரிப்பு என அடுத்தடுத்த சம்பவங்களால்ஸ்ரீரங்கம் பகுதியில் பதட்டம் நிலவுகிறது.
இதற்கிடையே துண்டிக்கப்பட்ட பெரியார் சிலைக்குப் பதிலாக ஐந்தரை அடி உயரம்கொண்ட வெண்கலச் சிலையை அதே இடத்தில் நிறுவ திராவிடர் கழகம் முடிவுசெய்துள்ளது. இந்த சிலையை வருகிற 16ம் தேதி தி.க. பொதுச் செயலாளர் கி.வீரமணிதிறந்து வைப்பார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!













Click it and Unblock the Notifications