கோவை, திருச்சியிலும் அண்ணா பல்கலை.
சென்னை:அண்ணா பல்கலைக்கழகம் மூன்றாகப் பிரிக்கப்பட்டு, கோவை, திருச்சியில் புதியதொழில்நுட்பப் பல்கலைக்கழகங்கள் தொடங்கப்படும் என உயர் கல்வித்துறைஅமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.
சட்டசபையில் இதுதொடர்பாக அவர் சட்ட மசோதாக்களை கொண்டு வந்தார்.மசோதாவைத் தாக்கல் செய்து அவர் பேசுகையில், 2001ம் ஆண்டு மாநிலபொறியியல் கல்லூரிகளின் இணைப்பு வகை பல்கலைக்கழகமாக அண்ணாபல்கலைக்கழகம் மாற்றப்பட்டது.
ஆனால் மாநிலம் முழுவதும் உள்ள 200க்கும் அதிகமான பொறியியல் கல்லூரிகளைநிர்வகிப்பது என்பது இயலாத ஒன்றாக மாறியுள்ளது.
எனவே பொறியியல் கல்லூரிகளை சிறப்பாகவும், திறனுள்ள வகையிலும்நிர்வகிப்பதற்காக கூடுதலாக இரு தொழில்நுட்பப் பல்கலைக்கழகங்களை நிறுவமுடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி கோவையிலும், திருச்சியிலும் இந்த புதிய பல்கலைக்கழகங்கள்நிறுவப்படும். கோவையில் நிறுவப்படுவது கோவை அண்ணா பல்கலைக்கழகம்என்றும், திருச்சியில் நிறுவப்படுவது திருச்சி அண்ணா பல்கலைக்கழகம் எனவும்அழைக்கப்படும். சென்னையில் உள்ளது சென்னை அண்ணா பல்கலைக்கழகம் எனஅழைக்கப்படும்.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர்,வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் உள்ள 105 பொறியியல் கல்லூரிகள்இணைக்கப்பட்டிருக்கும்.
கோவை அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் கோவை, திண்டுக்கல், தேனி, ஈரோடு,கரூர், நீலகிரி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் உள்ள53 பொறியியல் கல்லூரிகள் இணைந்திருக்கும்.
திருச்சி அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் திருச்சி, மதுரை, கடலூர், கன்னியாகுமரி,திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், நாகப்பட்டனம், தஞ்சாவூர், புதுக்கோட்டை,ராமநாதபுரம், சிவகங்கை, பெரம்பலூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள 75கல்லூரிகள் இணைந்திருக்கும் என்றார் பொன்முடி.
இந்த பல்கலை. பிரிவினைக்கு காங்கிரஸ், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள்வரவேற்பு தெரிவித்தன. ஆனால் பாமக மட்டும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, மதுரையிலும் அண்ணா பல்கலைக்கழகத்தின் கிளையைத் தொடங்கவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதுகுறித்து பரிசீலிக்கப்படும் எனபொன்முடி தெரிவித்துள்ளார்.
புதிய பல்கலைக்கழகங்களுக்கு விரைவில் தனி அதிகாரிகள் நியமனம்செய்யப்படவுள்ளதாகவும் பொன்முடி தெரிவித்துள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications