காஞ்சி மட தாக்குதல்-பிராமணர் சங்கம் கண்டனம்
சேலம்:சேலத்தில் உள்ள காஞ்சி சங்கர மடத்தின் கிளை மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குதமிழ்நாடு பிராமணர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இச் சங்கத்தின் முக்கிய பிரமுகர்களான சுகவனம், வெங்கட்ராமன், ஸ்ரீராமன்ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சேலம் மரவனேரி காஞ்சி சங்கரமடத்தில் சில சமூக விரோதிகள் அத்துமீறி புகுந்துஅங்கிருந்த அம்மன் படங்களை உடைத்ததோடு, பூஜை பொருட்களையும்சேதப்படுத்தியுள்ளனர். மேலும், அங்கு வேதம் படிக்கும் மாணவர்கள் மற்றும்ஆசிரியர்களை அடித்து காயப்படுத்தியுள்ளனர்.
இந்த காட்டுமிராண்டித்தனமான வெறிதாக்குதலை தமிழ்நாடு பிராமணர் சங்கம்வன்மையாக கண்டிக்கிறது. இத்தகைய மாபாதக செயலில் ஈடுபட்டவர்களையும்,அச்சம்பவத்துக்கு தூண்டுதலாக இருந்தவர்களையும் கண்டறிந்து, அவர்கள் மீதுதமிழக அரசு சட்டரீதியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், சேத மதிப்பபை கணக்கிட்டு உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும் என்றுகோரியுள்ளனர்.
இல.கணேசன் கண்டனம்:
இந் நிலையில் நெல்லையில் பேசிய பாஜக தலைவர் இல.கணேசன்,
ஸ்ரீரங்கத்தில் கோயில் முன்பு பெரியார் சிலை அமைக்கப்பட்டபோதே எதிர்ப்புகிளம்பியது. வாழ்நாள் முழுவதும் ஆத்தீகத்தை எதிர்த்த பெரியாரின் சிலையைகோயிலை நோக்கி வைக்கக்கூடாது என்பது எதிர்ப்பாளர்களின் கருத்தாக இருந்தது.ஜனநாயக நாட்டில் யாருக்கும் சிலை வைக்கலாம். பெரியார் சிலையை வைப்பதில்தவறு இல்லை. ஆனால் கோயில் முன்பு வைக்கக்கூடாது என எதிர்ப்பாளர்கள்கூறுகின்றனர்.
இந் நிலையில் சிலையை சேதப்படுத்தியதாக சிலரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இதையடுத்து சங்கர மடத்தில் தாக்குதல், கள்ளக்குறிச்சியில் பிள்ளையார் சிலைஉடைப்பு, பூணூல் அறுப்பு, சென்னை மேற்கு மாம்பலம் அயோத்தியா மண்டபத்தில்பெட்ரோல்குண்டு வீச்சு, இருவருக்கு அரிவாள் வெட்டு என அடுத்தடுத்து வன்முறைசம்பவங்கள் நடந்துள்ளன. ஆனால், இதுதொடர்பாக அரசு உடனடியாக எந்தநடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்த சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும்என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications