For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னையில் அமையும் சிஸ்கோ தொழிற்சாலை

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:நெட்வொர்க்கிங் டெக்னாலஜியில் உலக அளவில் மிகப் பெரிய நிறுவனமான அமெரிக்காவின் சிஸ்கோநிறுவனம் தனது தொழிற்சாலையை சென்னையில் அமைக்க திட்டமிட்டுள்ளது.

இதன் மூலம் 1,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என அந் நிறுவனத்தின் தலைவர் ஜான் சேம்பர்ஸ்தெரிவித்துள்ளார்.

டெல்லி வந்த ஜான் சேம்பர்ஸ் மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் தயாநிதி மாறனை சந்தித்துப்பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

சிஸ்கோவின் வளர்ச்சியில் 30% அதன் இந்திய நடவடிக்கைள் மூலம் கிடைக்கிறது. சிஸ்கோவின் ஏற்றுமதிக்கானமுக்கிய மையமாக விரைவில் இந்தியா மாறும்.

இதற்காக சென்னையில் உற்பத்தி பிரிவு தொடங்கப்படவுள்ளது. அடுத்த ஆண்டில் இந்தப் பிரிவுசோதனைரீதியாக இயங்கத் தொடங்கும். இதற்குத் தேவையான தொழிலாளர்களில் 95% பேர்இந்தியாவிலிருந்தே தேர்வு செய்யப்படுவார்கள்.

இந்தியாவில் சிஸ்கோ நிறுவனத்தின் கிளைகளில் ஊழியர்களின் எண்ணிக்கை 6,000 ஆக உயரும். அதன் மற்றதிட்டப் பணிகளுக்காக மேலும் 1,000 பேர் தேர்வு செய்யப்படுவர்.

இந்தியாவில் உற்பத்தி மற்றும் வர்த்தகப் பணிகளைக் கவனிக்க சிஸ்கோ நிறுவனத்தின் உயர் அதிகாரிகளில் 20%பேர் இந்தியாவுக்கு மாற்றப்படுவார்கள். அதனால் தாமதமின்றி பணிகள் தொடர வாய்ப்பு ஏற்படும். சிஸ்கோவின்வரலாற்றில் இத்தகைய ஒருங்கிணைப்பு இப்பொழுது தான் முதன் முதலில் நடக்கிறது.

இந்திய அரசுக்கு சொந்தமான பிஎஸ்என்எல் நிறுவனத்துடன் இனைந்து சென்னையில் கிராமப்புறத்தில்தொலைபேசி இணைப்புகள் மற்றும் தொலைபேசி இணைப்பகங்களை உருவாக்க ஆய்வகம் ஒன்றை அமைக்கரூ.45 கோடி ஒதுக்கி இருக்கிறோம் என்றார்.

பின்னர் தயாநிதி மாறன் கூறுகையில், இன்றைய உலக வர்த்தக போட்டியில் வெற்றி பெற உதவும் சூழ்நிலைஇந்தியாவில் கிடைக்கிறது என்ற எங்கள் கருத்து உண்மையானது தான் என்பதை சிஸ்கோ தலைவரின் கருத்துநிரூபித்து விட்டது என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X