இலங்கைக்கு உக்ரைன் போர் விமானங்கள்
கொழும்பு:யாழ்ப்பாணத்தையும், இதர பகுதிகளையும் இணைக்கும் ஏ 9 சாலையை மீண்டும் திறப்பது தொடர்பாக இலங்கைஅரசு மற்றும் விடுதலைப் புலிகளுடன் நார்வே சமரசக் குழு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.
இலங்கையில் சமாதான முயற்சிகள் முற்றிலும் முடங்கிப் போயுள்ள நிலையில் மீண்டும் ஒரு அமைதி முயற்சியைநார்வே சமரசக் குழு மேற்கொண்டுள்ளது. கொழும்பு வந்துள்ள குழுவின் தலைவர் ஜான் ஹான்சன் பேயர்,அரசுத் தரப்பில் இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்தப் பேச்சுவார்த்தையின்போது ஏ 9 சாலையை திறந்து விடுமாறு பேயர் கோரிக்கை விடுத்தார். ஆனால் இதைஏற்க இலங்கை அரசு மறுத்து விட்டது. இதுகுறித்து பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளரும், திட்டஅமலாக்கத் துறை அமைச்சருமான ரம்புகவெல்லா கூறுகையில்,
ஏ 9 சாலையை திறந்து விடும் பேச்சுக்கே இடமில்லை. வேண்டும் என்றால் யாழ்ப்பாணத்திற்கு உடனடியாக 400லாரிகளில் அத்தியாவசியப் பொருட்களை அனுப்ப இலங்கை அரசு தயாராக உள்ளது. ஆனால், இச்சாலையின்சில பகுதிகளை கட்டுப்படுத்தி வரும் புலிகள் அங்கிருந்து விலக வேண்டும். அப்போதுதான் இந்த உதவியையும்செய்ய முடியும்.
கிளிநொச்சிக்குச் செல்ல பேயருக்கு இலங்கை அரசு அனுமதி வழங்கியுள்ளது. புலிகள் தலைவர்களை அவர்சந்திக்கும்போது இலங்கை அரசின் இந்த முடிவு குறித்து அவர் தெரிவித்து, சாலையிலிருந்து அவர்களைவிலகுமாறு அறிவுறுத்துவார் என நம்புகிறோம் என்றார் ரம்புகவெல்லா.
அரசுத் தரப்பில் கிளிநொச்சி செல்ல அனுமதி கிடைத்ததைத் தொடர்ந்து பேயர் கிளிநொச்சி சென்று புலிகள்தலைமையுடன் ஆலோசனை செய்தார். இந்த சந்திப்புக்குப் பின்னர் புலிகளின் அரசியல் பிரிவு தலைவர்சுப.தமிழ்ச் செல்வன் கூறுகையில்,
ஏ9 சாலை தொடர்பாக இலங்கை அரசு தெரிவித்துள்ள நிபந்தனையை ஏற்க முடியாது.ஏ 9 சாலையைத் திறக்க எந்தவித நிபந்தனையையும் அரசுத் தரப்பு விதிப்பதை நாங்கள் ஏற்றுக் கொள்ளமாட்டோம். இதேபோல வாகரைக்குச் செல்லும் ஏ 15 சாலையையும் நிபந்தனையின்றி திறக்க இலங்கை அரசுமுன் வர வேண்டும்.
இலங்கை அரசிடமிருந்து எந்தவித ஒத்துழைப்பும் இல்லாத நிலையில், இந்த இரு சாலைகள் குறித்தும் சர்வதேசசமுதாயம் முயற்சிகள் மேற்கொள்வது அர்த்தமற்றதாகும்.
நார்வே தூதுக்குழு, போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு மற்றும் சர்வதேட சமுதாயம், இலங்கை அரசின்மனிதாபிமானமற்ற போக்கைக் கண்டிக்காமல் வெறுமனே பேச்சுவார்த்தை மட்டும் நடத்தி வருவதும், வலியுறுத்திவருவதும் தமிழர்களுக்கு விரக்தியை ஏற்படுத்தி வருகின்றன. அவர்கள் சோர்வடைந்து விட்டனர். நம்பிக்கைஇழந்து வருகின்றனர் என்றார் தமிழ்ச் செல்வன்.
விமானப் படை தாக்குதல்:
இதற்கிடையே வடகிழக்கில் புலிகள் மற்றும் ராணுவத்தினர் இடையே மோதல் முற்றி வருகிறது.
சம்பூர் அருகே இலங்கை விமானப்படை தமிழர்கள் பகுதிகளில் குண்டு வீசித் தாக்குதல் நடத்தி வருகிறது.புலிகளின் முகாம்கள் மீதும் விமானப்படை தாக்குதல் நடத்தியுள்ளது.புலிகள் மீதான தாக்குதலைத் தீவிரப்படுத்த உக்ரைன் நாட்டிடமிருந்து நான்கு மிக் 27 ரக செகன்ட் ஹேண்ட்போர் விமானங்களை வாங்க இலங்கை அரசு உத்தேசித்துள்ளது.
இந்த விமானங்களை ரூ. 46 கோடி கொடுத்து இலங்கை வாங்குகிறது. விரைவில் இவை இலங்கைக்கு வந்துசேரும் என ரம்புகவெல்லா கூறியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications