தமிழகத்தில் நாளை முதல் மீண்டும் மழை
சென்னை:தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் நாளை முதல் மீண்டும் மழை பெய்யும்வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளதாக சென்னை வானிலை ஆராய்ச்சி நிலையம்தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய வட கிழக்குப் பருவமழை இந்தமுறை தொடக்கத்திலேயே வெளுத்து வாங்கியது. தமிழகத்தின் அனைத்துப்பகுதியிலும் நல்ல மழை பெய்தது.
தொடக்கத்தில் வட மாவட்டங்களிலும், பிற்பகுதியில் தென் மாவட்டங்களிலும் எனஷிப்ட் போட்டு மழை பொழிந்து தள்ளி விட்டது. கடந்த சில வாரங்களாக தென்மாவட்டங்களில் விட்டு விட்டு நல்ல மழை பெய்து வருகிறது.
கடந்த ஆண்டு சென்னை, திருச்சியை அலைக்கழித்ததது போல இந்த முறைநெல்லையை உண்டு, இல்லை என்று பண்ணி விட்டது வடகிழக்குப் பருவ மழை.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மழை பெரிய அளவில் இல்லை. மாறாகவெயில் காலம் போல கடும் வெயில் அடித்து வந்தது. இந்த நிலையில் தற்போதுமீண்டும் மழை வேகம் பிடிக்கும் சூழல் உருவாகியுள்ளது.
வங்கக் கடலில் அந்தமானுக்கு அருகே நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுமண்டலம் தற்போது வலுக்குன்றி, காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறி மேற்கு நோக்கிநகரத் தொடங்கியுள்ளது வானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.
இது தமிழக கடலோரப் பகுதியை நோக்கி நகரத் தொடங்கியிருப்பதால், கடலோரமாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை முதல் மழை பெய்யத் தொடங்கும் என அதுஅறிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு நிலை நகரும் போக்கைப் பொறுத்து கடலோரப்பகுதிகளைத் தவிர்த்து தமிழகத்தின் வேறு பகுதிகளுக்கும் மழை கிடைக்குமா என்பதுதெரிய வரும் என்றும் அது விளக்கியுள்ளது.
இதன் மூலம் வடகிழக்குப் பருவ மழை தனது இரண்டாவது இன்னிங்ஸை நாளைமுதல் தொடங்கவுள்ளது.


Click it and Unblock the Notifications
