சசி உறவினர் ரூ. 10 லட்சம் செலுத்த உத்தரவு
டெல்லி:வெளிநாட்டில் இருந்து ஸ்கேன் கருவி இறக்குமதி செய்தது தொடர்பான வழக்கில் சென்னை தீர்ப்பாயத்தில் ஒருவாரத்துக்குள் ரூ. 10 லட்சம் செலுத்த சசிகலாவின் உறவினருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தஞ்சையில் மருத்தவமனை நடத்தி வருபவர் வினோதகன். இவர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் உறவினர்.இந்த மருந்தவமனைக்கு வெளிநாட்டில் இருந்து ஸ்கேன் கருவி வாங்கப்பட்டது. இதற்காக இறக்குமதிக்கானசுங்க வரி ரூ. 7.6 லட்சம் செலுத்த வேண்டும்.
ஆனால் , ஏழை, எளிய மக்களுக்கு சிகிச்சை செய்யப் போவதால் தனக்கு சுங்க வரியிலிருந்து விலக்கு அளிக்கவேண்டும் என்று வினோதகன் கோரியிருந்தார். இதையடுத்து அவருக்கு சுங்கத் துறை வரி விலக்கு அளித்தது.
ஆனால் ஸ்கேன் கருவியை ஏழைகளுக்கு பயன்படுத்தவில்லை என கூறி வரி விலக்கை சுங்கத் துறை ரத்துசெய்தது. மேலும் சுங்க வரியாக அபராதத் தொகையுடன் சேர்ந்து ரூ. 9 லட்சம் செலுத்த வேண்டும் என்றுவினோதகன் மருத்துவமனைக்கு கடந்த 2001ம் ஆண்டு சுங்கத் துறை உத்தரவிட்டது.
இதை எதிர்த்து மருத்துவமனை சார்பில் தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து ரூ. 25 லட்சம்முன் பணமாக செலுத்திய பிறகு மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தீர்ப்பாயம் கடந்த 2004ம்ஆண்டு உத்தரவிட்டது.
இதை எதிர்த்து மருத்துவமனை இயக்குனர் கோவிந்தராமன், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதைவிசாரித்த உச்ச நீதிமன்றம், தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது.
இந்த வழக்கு 2 ஆண்டுகளுக்கு பின் விசாரணைக்கு வந்தது. அப்போது சுங்கத் துறை சார்பில் ஆஜரானவழக்கறிஞர் தீர்ப்பாயத்தின் விதிமுறைப்படி ரூ. 25 லட்சத்தை கட்டாயம் செலுத்த வேண்டும். மேலும் தீர்ப்பாயஉத்தரவுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்றார்.
இதையடுத்து நீதிபதி தீர்ப்பாய உத்தரவுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி உத்தரவிட்டார். மேலும் ரூ. 10 லட்சம்ரூபாயை ஒரு வாரத்துக்குள் தீர்ப்பாயத்தில் மருத்துவமனை செலுத்து வேண்டும் என்றும், இந்த வழக்கைவிரைவாக தீர்ப்பாயம் விசாரித்து தீர்ப்பு கூற வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications