தேக்கடி: சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது
கம்பம்:முல்லை பெரியாறு அணை பிரச்சனையால் தேக்கடிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை வெகுவாககுறைந்து விட்டது.
தமிழக எல்லையையொட்டி கேரளாவில் அமைத்துள்ள தேக்கடி முக்கிய சுற்றலா தளமாக விளங்குகிறது. குமுளிவரை தமிழகம், அதைத் தாண்டிச் சென்றால் தேக்கடி. தேக்கடி அணை தான் முல்லைப் பெரியாறு அணையாகும்.
தேக்கடி அணையில் படகுச் சவாரி செய்யவும், அதைச் சுற்றியுள்ள காட்டுப் பகுதியில் திரியும் யானைகள்உள்ளிட்ட விலங்குக் கூட்டத்தைக் காணவும் அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் இங்கு வருவது வழக்கம்.
இந் நிலையில் முல்லை பெரியாறு பிரச்சனையால் கடந்த இரண்டு மாதமாக தேக்கடிக்கு வரும் சுற்றுலாபயணிகளின் வருகை வெகுவாக குறைந்து விட்டது.
இதனால் இப்பகுதியில் ஹோட்டல்கள், லாட்ஜ்கள் தவிர ஆட்டோ, டாக்சி உரிமையாளர்கள், சுற்றுலா கைடுகளின்வருமானம் பாதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கேரள சுற்றுலா கைடு ஒருவர் கூறுகையில் முல்லை பெரியாறு அணை பிரச்சனைக்கு கேரள அரசுவிரைவில் தீர்வு காணாவிட்டால் தேக்கடி, குமுளி பகுதிகளுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கைகுறைந்து விடும்.
மேலும் இப்பகுதியில் வசிக்கும் மக்களும் வருமானம் இன்றி பாதிக்கப்படுவார்கள் என்றார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications