இந்திய ஒப்பந்தம்-யுஎஸ் நாடாளுமன்றம் ஒப்புதல்
வாஷிங்டன்:இந்தியாவுடனான சிவில் அணுசக்தி ஒப்பந்தத்திற்கு அமெரிக்க நாடாளுமன்றத்தின்பிரதிநிதிகள் சபை ஒப்புதல் அளித்தது.
இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையிலான அணு சக்தி ஒப்பந்தத்தில்அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷும், பிரதமர் மன்மோகன் சிங்கும்கையெழுத்திட்டுள்ளனர்.
இந்த ஒப்பந்தத்தின் வரைவ மசோதா சமீபத்தில் அமெரிக்க நாடாளுமன்றத்தின்செனட் சபையில் அமோக ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. ஆனால், பிரதிநிதிகள்சபையிலும் ஒப்புதலைப் பெற்ற பிறகே ஒப்பந்தம் அது அமலுக்கு வரும் என்றநிலையில் பெரும் எதிர்பார்ப்புடன் இந்தியா காத்திருந்தது.
இதையடுத்து இறுதி ஒப்பந்த வரைவு மசோதா இந்திய நேரப்படி நேற்றிரவுபிரதிநிதிகள் சபையில் தாக்கல் செய்யப்பட்டது. அதன் மீது சூடான விவாதம் நடந்தது.விவாதத்தின் இறுதியில் வாக்கெடுப்பு நடந்தது. இதில், 330 ஓட்டுக்கள்ஒப்பந்தத்திற்கு ஆதரவாகவும், 59 வாக்குகள் எதிராகவும் கிடைத்தன.
அடுத்து செனட் சபையில் இறுதி வரைவு மசோதா ஓரிரு நாட்களில் மீண்டும் தாக்கல்செய்யப்படும். அதிலும் நிறைவேற்றப்பட்ட பின்னர் அதிபர் ஜார்ஜ் புஷ் இதில்கையெழுத்திடுவார்.
அவர் கையெழுத்திட்ட பின்னர் அணு சக்தி ஒப்பந்தம் முழுமையாக அமலுக்கு வரும்.அதன் மூலம் இந்திய அணு உலைகளுக்குத் தேவையான எரிபொருள் மற்றும்தொழில்நுட்ப உதவிகளை அமெரிக்கா வழங்கும். மேலும், ராணுவம் அல்லாத அணுசக்தி நிலையங்களை சர்வதேச அணு சக்தி கவுன்சில் ஆய்வுக்கு இந்தியாஅனுமதிக்கும்.
கிறிஸ்துமஸையொட்டி அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு விடுமுறை விடப்படவுள்ளது.அதற்கு முன்பாகவே செனட் சபையில் இந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு விடும்,புஷ் கையெழுத்திட்டு விடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications