வெறிநாயிடம் சிக்கி 3 வயது சிறுவன் பலி
கோவை:கோவையில், வெறிநாய் கடித்து 3 வயது சிறுவன் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே நாகராஜ் என்ற சிறுவனை தெருவில் திரிந்த20க்கும் மேற்பட்ட நாய்கள் கடித்து அச்சிறுவன் படுகாயம் அடைந்தான். இந்த சம்பவம் தமிழகத்தையேஉலுக்கியது.
தெருவில் திரியும் நாய்களைப் பிடிக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காததற்கு பொதுமக்கள் மத்தியில்பெரும் கண்டனம் எழுந்தது. இன்னும் அப்பகுதியில் ஏராளமான தெரு நாய்கள் தொடர்ந்து சுற்றிக்கொண்டுதான்உள்ளன என்பது கொடுமையிலும் கொடுமை.
இந்த சம்பவத்தின் பாதிப்பே மக்கள் மனதிலிருந்து இன்னும் விலகாத நிலையில், கோவையில் வெறிநாய் கடித்து3 வயது சிறுவன் இறந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செல்வபுரம் பகுதியைச் சேர்ந்தவர் வனிதா. இவரை விட்டு கணவர் பிரிந்து சென்று இன்னொரு கல்யாணம்செய்து கொண்டார். இதனால் வனிதா தனது 3 வயது மகன் அஜீத்துடன் வீட்டு வேலை பார்த்து வாழ்க்கையைஓட்டி வருகிறார். அஜீத்தை அப்பகுதியில் உள்ள பால்வாடியில் சேர்த்துப் படிக்க வைத்து வருகிறார்.
15 நாட்களுக்கு முன்பு அஜீத் தனது வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது தெருவில் சுற்றித்திரிந்த வெறிநாய் ஒன்று அஜீத்தை கடித்துக் குதறி விட்டது. இதில் கன்னம், முகத்தில் படுகாயம் ஏற்பட்டது.
இதையடுத்து கோவை அரசு மருத்துவமனையில் அஜீத்தை சேர்த்து சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சைபலனளிக்காமல் வெள்ளிக்கிழமை அஜீத் நிலைமை மோசமடைந்தது. இதையடுத்து அவனை வீட்டுக்குஅழைத்துச் செல்லுமாறு டாக்டர்கள் கூறி விட்டனர்.
இதையடுத்து அஜீத்தை வீட்டுக்கு அழைத்து வந்து விட்டனர். இந்த நிலையில் நேற்று காலையில் அஜீத்தின் உடல்நலம் மோசமானதைத் தொடர்ந்து மீண்டும் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயேஅஜீத் பரிதாபமாக இறந்தான்.
மருத்துவமனையில் சரியாக சிகிச்சை தராததால்தான் சிறுவன் இப்படி பரிதாபமாக இறக்க நேரிட்டது என்றுதகவல் பரவியதால் ஏராளமானோர் மருத்துவமனையில் குவிந்தனர். அவர்களை டாக்டர்களும், ஊழியர்களும்,போலீஸாரும் சமாதானப்படுத்தி கலைந்து போகச் செய்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications