மீன் வலையில் மீண்டும் சிக்கிய ராக்கெட்டுகள்
ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடிக்க வீசிய வலையில் மீண்டும் 2 ராக்கெட் குண்டுகள் சிக்கியது பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது ராக்கெட் குண்டுஅடங்கிய பெட்டி ஒன்று சிக்கியது. இந்த குண்டு இலங்கை கடற்படை அல்லது விடுதலைப் புலிகளுடையதாகஇருக்கலாம் என கடற்படை அதிகாரிகள் சந்தேகம் தெரிவித்திருந்தனர்.
இந்த ராக்கெட் குண்டு சென்னைக்கு மேல் விசாரணைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போதுமேலும் 2 ராக்கெட் குண்டு சிக்கியுள்ளது.
இன்று காலை மீனவர்கள் ராமேஸ்வரம் அருகே கடலில் மீன் பிடித்துக் கொண்டிந்தனர். அப்போது மீனவர்கள்வலையில் 2 மரப் பெட்டிகள் சிக்கின. கடந்த முறை இதே பகுதியில்தான் ராக்கெட் குண்டு சிக்கியது.
இந்த இரண்டு மரப் பெட்டிகளிலும் ராக்கெட் குண்டுகள் இருந்தன. இவையும் கடற்படையிடம்ஒப்படைக்கப்பட்டது. அடுத்தடுத்து ஒரே பகுதியில் ராக்கெட் குண்டுகள் சிக்கி வருவதால், அந்தப் பகுதியில்மேலும் பல ராக்கெட் குண்டுகள் அடங்கிய பெட்டிகள் கிடக்கலாம் என சந்தேகப்படுகிறது.












Click it and Unblock the Notifications