சுனிதாவுடன் விண்ணில் பாய்ந்தது டிஸ்கவரி
புளோரிடா:இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் விஞ்ஞானி சுனிதா வில்லியம்ஸ் உள்பட 7 விண்வெளி வீரர்களுடன்அமெரிக்காவின் டிஸ்கவரி ஓடம் வெற்றிகரமாக ஏவப்பட்டது.
கடந்த 2003ம் ஆண்டு கொலம்பியா விண்கலம் தனது விண் பயணத்தை முடித்து விட்டு பூமிக்குத்திரும்பும்போது, தரையிறங்க சில விநாடிகளே இருந்த நிலையில் நடுவானில் வெடித்துச் சிதறியது. இதில் இந்தியவீராங்கனை கல்பனா சாவ்லா உள்ளிட்ட விண்வெளி வீரர்கள் உயிரிழந்தனர்.
அதன் பிறகு தற்போது டிஸ்கவரி விண் ஓடம் இன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இந்தியநேரப்படி காலை 7.17 மணிக்கு டிஸ்கவரி செலுத்தப்பட்டது. இந்த விண்வெளி பயணத்தில் இந்தியவம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட 7 பேர் இடம் பெற்றுள்ளனர்.
வியாழக்கிழமையே டிஸ்கவரி செலுத்ப்படுவதாக இருந்தது. ஆனால் வானிலை மோசமாக இருந்ததால் இதுசனிக்கிழமைக்கு (அமெரிக்க நாள் கணக்குப்படி) ஒத்திவைக்கப்பட்டது.
டிஸ்கவரி ஓடம் மொத்தம் 12 நாட்களுக்கு விண்ணில் இருக்கும். இந்த பயணத்தின்போது விண்ணில் உள்ளசர்வதேசத விண்வெளி நிலையத்தில் மின்சார வயர்களை மாற்றியமைக்கும் பணியில் விண்வெளி வீரர்கள்ஈடுபடவுள்ளனர்.
சுனிதா தவிர ஸ்வீடனின் முதல் விண்வெளி வீரரான கிறிஸ்டர் புக்லசாங், பைலட் வில்லியம் ஓபலின், பிளைட்என்ஜீனியர் ராபர்ட் கர்பீம், நிக்கோலஸ் பாட்ரிக், ஜான் ஹிக்கின்பாதம், போலன்ஸ்கி ஆகியோரும் விண்ணுக்குச்சென்றுள்ளனர்.
சுனிதா வில்லியம்ஸ் 6 மாதங்களுக்கு சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருப்பார். மற்றவர்கள் 12 நாள்பயணத்திற்குப் பிறகு பூமிக்குத் திரும்புவார்கள். டிசம்பர் 21ம் தேதி டிஸ்கவரி பூமிக்கு திரும்புகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications