திருப்பூரில் பெரியார் படத்துக்கு செருப்பு மாலை
திருப்பூர்:பெரியார் படத்துக்கு செருப்பு மாலை அணிவித்ததாக திருப்பூரில் 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் ஐயப்பன் சிலையை உடைத்த குடிகாரரும் கைது செய்யப்பட்டார்.
கோவை மாவட்டம் திருப்பூரில் உள்ள பெரியார் காலனி பகுதியில் பெரியார் படம் அடங்கிய பெயர்ப் பலகைஉள்ளது. இந்தப் பகுதிக்கு நேற்று நள்ளிரவு வந்த இந்து முன்னணியைச் சேர்ந்த மாணிக்கம், பிரகாஷ், சாரதிஆகியோர் பெரியார் படத்துக்கு செருப்பு மாலை அணிவித்தனர்.
இதைப் பார்த்து விட்ட அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் 3 பேரையும் வளைத்துப் பிடித்து போலீஸாரிடம்ஒப்படைத்தனர். அவர்களை போலீஸார் கைது செய்தனர். அனைவரும் திருப்பூரைச் சேர்ந்தவர்கள்.
இதேபோல, விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் குடிபோதையில் ஐயப்பன் கோவிலுக்குள் புகுந்து சாமிசிலை, பூஜைப் பொருட்களை சூறையாடிய வாலிபரை போலீஸார் கைது செய்தனர்.
ஐயப்பன் கோவிலுக்குள் குடிபோதையில் நுழைந்த திருவள்ளூரைச் சேர்ந்த வேலு என்ற வாலிபர் அங்கிருந்தசாமி சிலைகயை தூக்கி எறிந்து உடைத்தார். பின்னர் பூஜைப் பொருட்களையும் எடுத்து தெருவில் எறிந்தார்.
மேலும், அங்கிருந்த சரஸ்வதி, பிள்ளையார், வெங்கடாசலபதி ஆகிய சுவாமிகளின் சிலைகளையும் அவர்உடைத்தார். தகவல் அறிந்ததும் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களும், பொதுமக்களும் விரைந்து வந்து அந்த நபரைப்பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
பின்னர் கோவிலுக்குப் பாதுகாப்பு தரக் கோரி சென்னை-சேலம் நெடுஞ்சாலையில் சாலை மறியலில் குதித்தனர்.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
போலீஸார் விரைந்து வந்து அவர்களை சமாதானப்படுத்தி கலைந்து போகச் செய்தனர். வேலுவை பின்னர்போலீஸார் கைது செய்தனர். சாலை மறியல் போராட்டத்தால் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்துபாதிக்கப்பட்டது.
போலீஸ் மீண்டும் எச்சரிக்கை:
இந்த நிலையில், தலைவர்களின் சிலைகள், படங்கள், வழிபாட்டுத் தலங்களில் தாக்குதல், தீவைப்புபோன்றவற்றில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை மீண்டும் எச்சரித்துள்ளது.
மேலும் வதந்தி பரப்புவோர் மீதும் கடும் நடவடிக்கை பாயும் என போலீஸார் எச்சரித்துள்ளனர். இதுபோன்றசெயல்களில் ஈடுபடுவோர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறைவெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications