வாஜ்பாய்-அத்வானி மோதல் தீவிரம்!
டெல்லி:பாஜகவில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கும் மூத்த தலைவரான அத்வானிக்கும் இடையே நிலவி வரும் பனிப்போர் மீண்டும் வெளியில் தலைகாட்டியுள்ளது.
பாஜக ஆட்சியில் இருந்தபோதே இருவருக்கும் இடையே முட்டல், மோதல்கள் நிலவி வந்தன. ஆனால், இருதலைவர்களும் அதை அழகாக மறைத்து வந்தனர். இருந்தாலும் அவ்வப்போது அவர்களது ஆதரவாளர்கள்வாயிலாக இந்த மோதல் நடந்தே வந்தது.
வாஜ்பாய் தனது ஆதரவாளரான பிரமோத் மகாஜனை பாஜகவில் அதி வேகத்தில் வளர்த்துவிட்டார்,அத்வானியும் தன் பங்குக்கு அருண் ஜேட்லி, நரேந்திர மோடி ஆகியோரை பலம் பெறச் செய்தார். ஒரு கட்டத்தில்வாஜ்பாய் விரும்பாமலேயே ஆர்எஸ்எஸ்-விஎச்பி ஆகியவற்றின் துணையோடு துணைப் பிரதமரானார்அத்வானி.
இந் நிலையில் ஆட்சி பறிபோனது. தோல்விக்கு யார் காரணம் என்பதில் இரு தரப்பினருக்கும் இடையே மோதல்நடந்தாலும் அமுக்கி வாசிக்கப்பட்டது.
இப்போது இருவருக்கும் இடையிலான மோதல் டிவி பேட்டி வழியாக வெளியில் வந்துள்ளது. சிஎன்என்-ஐபிஎன்தொலைக்காட்சியின் பொலிடிகல் எடிட்டர் புபேந்திர செளபேவுக்கு அத்வானி கொடுத்துள்ள சிறப்புப் பேட்டியில்,வாஜ்பாய் மீதான தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார் அத்வானி.
அடுத்த நாடாளுமன்றத் தேர்தலின்போது பாஜக சார்பில் நான் தான் பிரதமர் பதவிக்கு போட்டியிடுவேன் என்றுபகிரங்கமாக அறிவித்துள்ளார் அத்வானி. இதன்மூலம் வாஜ்பாயை விலகி நிற்குமாறு அத்வானி கூறுவதுதெளிவாகிறது.
அந்தப் பேட்டியின் விவரம்:
கேள்வி: 2009ல் நடக்கும் நாடாளுமன்றத் தேர்திலின்போது பிரதமர் பதவிக்கு யாரை பாஜக முன் நிறுத்தும்?
அத்வானி: பிரிட்டிஷ் ஆட்சி முறைப்படி நாடாளுமன்றத்தில் எதிர்க் கட்சித் தலைவராக இருப்பவர் தான் பிரதமர்பதவிக்கு நிறுத்தப்படுவார். இப்போது நான் தான் எதிர்க் கட்சித் தலைவராக இருக்கிறேன்.
கேள்வி: முறைப்படி பார்த்தால் கட்சியின் தலைவராக இருக்கும் ராஜ்நாத் சிங் தானே பிரதமர் பதவிக்குநிறுத்தப்பட வேண்டும்?
அத்வானி: அதை கட்சியும் மக்களும் தான் முடிவு செய்ய வேண்டும். அதே நேரத்தில் எனது பெயரை பிரதமர்பதவிக்கு வாஜ்பாய் முன்மொழிவார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. அவரை பிரதமராக்க நான் தான் முன்புமுன்மொழிந்தேன்.
ஆனால், நான் செய்த உபகாரத்துக்கு பிரதி உபகாரமாக அடுத்த தேர்தலில் என் பெயரைவாஜ்பாய் முன்மொழிய மாட்டார் என்று கருதுகிறேன். அவரிடம் நான் அதைஎதிர்பார்க்கவும் இல்லை.
ராஜ்நாத் சிங்கை என்ன செய்யலாம் என்பதை அப்புறம் பார்த்துக் கொள்ளலாம்.
கேள்வி: கட்சியின் அன்றாட செயல்பாடுகளில் நீங்கள் எந்த அளவுக்கு ஈடுபாட்டோடு இருக்கிறீர்கள்?
பதில்: முன்பெல்லாம் நான் அன்றாட விஷயங்களை கவனித்து வந்தேன். இப்போது அதை நிறுத்திவிட்டேன்.வெறும் கன்சல்டன்ட் மாதிரி தான் இருக்கிறேன்.
கேள்வி: பாகிஸ்தான் போனது, ஜின்னா சமாதிக்குப் போனது, அங்கு பேசிய பேச்சு ஆகியவற்றால் ஏற்பட்டவிளைவுகள் (கட்சியின் தலைவர் பதவியை அத்வானி இழக்க நேர்ந்தது) குறித்து என்ன நினைக்கிறீர்கள்?
அத்வானி: அந்தப் பயணம் நான் ஒரு இஸ்லாமிய விரோதி, பாஜக முஸ்லீம்களின் எதிரி என்ற தவறானபார்வையை அகற்ற உதவியது.
கேள்வி: இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு போன்ற சலுகையைத் தர சச்சார் கமிட்டி பரிந்துரைத்துள்ளதைஏற்கிறீர்களா?
அத்வானி: முஸ்லிம்களுக்காக அமைக்கப்பட்ட சச்சார் கமிட்டியும் அதன் அறிக்கையும்காங்கிரஸ் கட்சியின் வழக்கமான ஓட்டு வங்கி அரசியல் தான் என்றார் அத்வானி.
இந்தப் பேட்டி மூலம், வாஜ்பாய்-அத்வானி மோதல் வெட்ட வெளிச்சமாகியுள்ளது.












Click it and Unblock the Notifications