பெண்களுக்கு அதிக உரிமை வேண்டும்: வைகோ
சென்னை:33 சதவீத இட ஒதுக்கீடு பெற பெண்கள் போராடுகிற நிலை உள்ளது. அவர்களுக்கு இன்னும் அதிமானஉரிமைகள் தரப்பட வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.
சென்னை வேப்பேரி ஜெயின் பெண்கள் கல்லூரியில் மனித உரிமைகள் தினவிழாவில் வைகோ பேசியதாவது,
நான் நாடாளுமன்றம் உள்பட பல இடங்களில் பேசி இருக்கிறேன். ஆனால் கல்லூரிகளுக்கு பேசச் செல்லும்போதுமட்டும் ஒருவித தயக்கம் வருகிறது. இன்றைய தலைமுறைக்கு ஏற்ப நமக்கு தெரிந்தவைகளை கூறும் போதுஅதை கேட்கும் உணர்வு இருக்குமா என்ற தயக்கம் தான் அது.
மனிதனுக்கு கருத்தை சொல்லும் உரிமை வேண்டும். பேச்சுரிமை வேண்டும். உலகில் மனிதன் பிறக்கும் போதுசுதந்திரமாக பிறக்கிறான். பின்னால் அவன் பல அடக்குமுறைக்கு ஆளாகிறான். பசி கொடுமை, ஆட்சி அடக்குமுறையால் தனது உரிமை இழந்து விடுகிறான்.
ஜனநாகத்தில் நமக்கு உரிமைகளை தருவது வாக்கு சீட்டு. இன்று உரிமைகளை பெற பெண்கள் போராடுகிறார்கள்.மனித உரிமைகளை பாதுகாக்க ஒவ்வொருவரும் பாடுபடவேண்டும்.
எந்த பிரச்சனையையும் ஒரு பக்கமாக பார்க்க கூடாது. அதற்கான இன்னொரு பக்கத்தையும் பார்க்க வேண்டும்.எப்போது நடுநிலையோடு பிரச்சனைகளை அணுக வேண்டும். வருங்கால உலகம் பெண்களின் உரிமைகளைநிலைநாட்டும் என்றார்.
பின்னர் மாணவிகளின் கேள்விகளுக்கு வைகோ பதிலளித்தார்.
கேள்வி: அரசியலில் இளைய தலைமுறைக்கு வாயப்பு வழங்கப்படுவது இல்லையே?
பதில்: இளைய தலைமுறைக்கு வேண்டுகோள் வைப்பது என்னவென்றால் எது சரி, எது உண்மைஎன்றுபடுகிறதோ அதைச் செய்யுங்கள், வாய்ப்புகளை நீங்கள் உருவாக்கி கொள்ள முடியும். இளையதலைமுறைக்கு வாய்ப்பை வழங்க மறுப்பவர்கள் நிராகரிக்கப்படுவார்கள்.
கேள்வி: பெண்கள் 33% இடஒதுக்கீடு பெற இன்னும் போராடுகிற நிலை உள்ளதோ?
பதில்: ஆமாம் 33% இட ஒதுக்கீடு பெற போராடுகிற நிலைதான் உள்ளது. இன்னும் அதிமான உரிமைஅவர்களுக்கு வேண்டும்.
கேள்வி: 33% இடஒதுக்கீடு பேச்சளவில் மட்டுமே உள்ளது செயலாக்கம் எப்போது?
பதில்: அது உங்கள் கையில் தான் உள்ளது. ஓட்டுச் சீட்டு உங்களிடம் தானே உள்ளது என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications