மதுரை தொண்டு நிறுவனத்துக்கு ஜப்பான் நிதியுதவி
சென்னை:தென்னிந்திாயவைச் சேர்ந்த 2 தொண்டு நிறுவனங்களுக்கு ஜப்பான் அரசு நிதியுதவி அளிக்க முன் வந்துள்ளது.
மதுரையைச் சேர்ந்த நண்பன் மற்றும் பெங்களூரைச் சேர்ந்த சமூகா ஆகிய நிறுவனங்களுக்கும் இந்த உதவிஅளிக்கப்படுகிறது. இதற்கான ஒப்பந்தம் சென்னையில் கையெழுத்தானது. ஒப்பந்தத்தில் இரு தொண்டுநிறுவனங்களின் பிரதிநிதிகளும், ஜப்பான் தூதர் யோஷியாகி கொடாகியும் கையெழுத்திட்டுள்ளனர்.
சுய உதவிக் குழுக்கள் உள்ளிட்ட அமைப்புகள் மூலம் சமூக, பொருளாதார சீரமைப்புத் திட்டங்களை இந்ததொண்டு நிறுவனங்கள் மேற்கொள்ள இந்த உதவி வழங்கப்படுகிறது.
சமூகா நிறுவனத்திற்கு 88,433 அமெரிக்க டாலர்கள் வழங்கப்படும். கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டத்தில்நலிவடைந்த பிரிவினருக்கான சமூக ஆதார மையத்தை நிர்மாணிக்க இந்த உதவி பயன்படுத்தப்படும்.
இதேபோல நண்பன் அமைப்புக்கு 81,028 அமெரிக்க டாலர் நிதியுதவி அளிக்கப்படுகிறது. தெருவோர சிறார்நலனுக்காக நண்பன் அமைப்பு பாடுபடுகிறது. அவர்களுக்கு கவுன்சிலிங், அடிப்படைக் கல்வி மற்றும் தொழிற்பயிற்சி ஆகியவற்றையும் நண்பன் அளிக்கிறது. தற்போது மதுரையில் இதுபோன்ற ஆதரவற்றோருக்காக ஒருஆட்டோமொபைல் பணிமனையையும் நண்பன் நடத்தி வருகிறது.
நண்பன் அமைப்பின் பணிமனையை மேம்படுத்த ஜப்பான் நிதியுதவி அளித்துள்ளது. ஒரு ஆண்டுக்குள் இருநிறுவனங்களும் இந்த நிதியைப் பயன்படுத்தி கட்டுமானப் பணிகளை முடிக்கும்.
கிட்டத்தட்ட 1,000 உடல் ஊனமுற்றோர், விவசாயிகள், பிற நலிவடைந்த பிரிவினர் சமூகா அமைப்பின்சேவையால் பயன் அடைவர். அதேபோல நண்பன் அமைப்பின் பணிமனையில் 200 இளைஞர்களுக்கு தொழிற்பயிற்சி அளிக்கப்படும்.












Click it and Unblock the Notifications