கேரள டிவியில் ஒளிபரப்பாகும் டுபாக்கூர் சிடி
குமுளி:முல்லைப் பெரியாறு அணை உடைந்து, அந்தத் தண்ணீர் வெள்ளம் போல பாய்ந்து, கேரளாவின் ஐந்து ஊர்கள்மூழ்கிப் போய் விட்டதாகவும், பல லட்சம் மக்கள் வெள்ளத்தில் தத்தளிப்பது போலவும் கிராபிக்ஸ் மூலம்உருவாக்கப்பட்ட சிடியை கேரள டிவி ஒன்று அடிக்கடி ஒளிபரப்பாகி வருவது கேரளாவில் பெரும் பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தனது தரப்பு வாதத்தில் பெரிய அளவில் நியாயம் இல்லை என்பதைஉணர்ந்துள்ள கேரள அரசு இப்போது எந்தெந்த வழியில் இப்பிரச்சியைத் திசை திருப்பலாம் என சிந்திக்கத்தொடங்கியுள்ளது.
முதலில் புதிதாக ஒரு அணையைக் கட்டி தண்ணீரைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என யோசனை தெரிவித்தது.இந்த யோசனையை அப்படியே நிராகரித்த விட்டது தமிழக அரசு.
இந்த நிலையில் தமிழகத்திற்கு எதிராக தனது மாநில மக்களைத் திசை திருப்பி விடும் வேலை கேரளாவில் நடந்துவருகிறது. அதாவது ஒரு கிராபிக்ஸ் மூலம் முல்லைப் பெரியாறு அணை உடைந்து தண்ணீர் வெளியேறுவதுபோலவும், அந்தத் தண்ணீர் வண்டிப்பெரியாறு, வல்லக்கடவு, ஏலப்பாறை, உப்புத்துறை ஆகிய பகுதிகள் மூழ்கிப்போய் விட்டது போலவும், இதில் சிக்கி 30 லட்சம் பேர் தவிப்பதாகவும் அதில் உள்ளது.
இந்த கிராபிக்ஸ் சிடியை தனியார் மலையாள டிவி ஒன்று அடிக்கடி ஒளிபரப்பி வருகிறது. மக்களை பீதியூட்டி,தமிழகத்திற்கு எதிராக கிளர்ச்சியில் இறங்கச் செய்யும் தந்திரச் செயலாகவே இது கருதப்படுகிறது.
கேரள அரசு இந்த சிடி ஒளிபரப்பை தடுக்க முயற்சிக்கவில்லை என்பதால் அரசின் மறைமுக அனுமதியுடன் இந்தசிடி ஒளிபரப்பு நடந்து வருவதாக சந்தேகிக்கப்படுகிறது. இந்த சிடியில் இடம்பெற்றிருக்கும் காட்சிகளைப் பார்த்துசம்பந்தப்பட்ட பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர். தேவையில்லாமல் பதட்டமடைந்துள்ளனர்.
தேவையில்லாமல் தனது மக்களை குழப்பி, பீதிக்குள்ளாக்கி, பதட்டத்திற்குள்ளாக்கி தினசரி வாழ்க்கையைபயத்துடனேயே கழிக்க வைக்கும் அரசும் ஒரு அரசுதானா என்ற சந்தேகம் எழாமல் இல்லை!












Click it and Unblock the Notifications