சென்னையில் தேர்வு எழுதிய அகதி மாணவர்கள்
சென்னை:
இலங்கையிலிருந்து அகதிகளாக தமிழகம் வந்துள்ள மாணவ, மாணவியர் நேற்று சென்னையில் தங்களது ஒலெவல் (பத்தாவது வகுப்பு) தேர்வை எழுதினர்.
இலங்கையில் ராணுவத்தினரின் தாக்குதலுக்குப் பயந்து குடும்பம் குடும்பமாக இந்த ஆண்டு மட்டும் கிட்டத்தட்ட3000க்கும் மேற்பட்டோர் தமிழகத்திற்கு அகதிகளாக வந்துள்ளனர். அப்படி அகதிகளாக வந்தவர்களில் அங்குபத்தாவது வகுப்புப் படித்துக் கொண்டிருந்த பல மாணவ, மாணவியரும் அடங்குவர்.
இவர்கள் தங்களால் பத்தாவது வகுப்பை முடிக்க முடியுமா என்ற அச்சத்தில் இருந்து வந்தனர். இவர்களதுகவலையைப் போக்கும் வகையில், சென்னையில் இவர்களுக்காக தனியாக தேர்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.தமிழக அரசு இதற்கு முழு ஒத்துழைப்பையும் வழங்கியது.
இதைத் தொடர்ந்து 60 மாணவிகள் உள்ளிட்ட கிட்டத்தட்ட 100 பேர் சென்னை சாந்தோமில் உள்ள ரோசரிமெட்ரிகுலேஷன் பள்ளியில் தங்களது பொதுத் தேர்வை எழுதினர். காலை 9 மணிக்கு தேர்வு தொடங்கியது.இருப்பினும் 8 மணிக்கே அத்தனை மாணவ, மாணவியரும் வந்து ஆர்வத்தோடு தேர்வு எழுதக் காத்திருந்தனர்.
நேற்று தமிழ் இலக்கியத்திற்கான தேர்வு நடந்தது. தேர்வை முடித்து விட்டு வெளியே வந்த மாணவர்களின்முகத்தில் நிம்மதிப் பெருமூச்சும், சந்தோஷக் கீற்றும் தென்பட்டது.
தேர்வு குறித்து திரிகோணமலையைச் சேர்ந்த மாணவர் தியாகராஜன் கூறுகையில், இலங்கையில் நிலைமைமிகவும் மோசமாக இருக்கிறது. எனவேதான் நாங்கள் படிப்பை விட்டு விட்டு இங்கே வர வேண்டியதாயிற்று.படிப்பு என்னாகுமோ என்ற கவலையில் இருந்தோம். ஆனால் இப்போது இங்கே அமைதியான முறையில்,எங்களது நாட்டில் கூட இப்படி நிம்மதியாக தேர்வு எழுதியிருக்க மாட்டோம், தேர்வை ஆரம்பித்துள்ளோம்.மிகவும் சந்தோஷமாக உள்ளது என்றார்.
மன்னார் பகுதியைச் சேர்ந்த புருஷோத்தமன் என்ற மாணவர் கூறுகையில், தமிழக அரசுக்கும், மத்திய அரசுக்கும்,இலங்கை அரசுக்கும் நாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். எங்களால் தற்போது தேர்வை முடித்து விட்டுதொடர் கல்வியை இடைவிடாமல் மேற்கொள்ள முடியும் என்றார்.
தேர்வு குறித்து மாணவிகள் கூறுகையில், கேள்வித்தாள் கஷ்டமாகவும் இல்லை, அதேசமயம் மிகவும் எளிதாகவம்இல்லை. நடுத்தரமாக இருந்தது. திருப்தியாக எழுதினோம். எதிர்காலம் குறித்த கவலை போய் விட்டது. இனிநிம்மதியாக பிற தேர்வுகளையும் எழுதுவோம் என்றனர். டிசம்பர் 21ம் தேதி தேர்வு நடைபெறுகிறது.
இந்த மாணவ, மாணவியர் தேர்வுக்கு தயாராகும் பொருட்டு மண்டபம் முகாமுக்கு இலங்கையிலிருந்து 15ஆசிரியர்கள் வரவழைக்கப்பட்டு 2 மாதங்கள் பயிற்சி அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இலங்கைக்கு வெளியே அந்நாட்டு பொதுத் தேர்வு ஒன்று நடத்தப்படுவது இதுவே முதல் முறையாகும்.












Click it and Unblock the Notifications