அரசு சொத்து சேதம்: கட்சிகளுக்கு நோ ஃபைன்

Subscribe to Oneindia Tamil

சென்னை:அரசியல் கட்சிகள் நடத்தும் பேரணிகள், போராட்டங்களின்போது வன்முறை ஏற்பட்டு பொதுச் சொத்துக்களுக்குசேதம் ஏற்பட்டால், அதற்கான இழப்பீட்டுத் தொகையை அந்தக் கட்சிகளிடமிருந்து வசூல் செய்யும் முறையைரத்து செய்ய முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழகத்தில் பல்வேறு கட்சிகள் சார்பிலும், அமைப்புகள் சார்பிலும் நடத்தப்படும் போராட்டங்களின் போதும்,கடையடைப்புகளின் போதும், சில சமூக விரோதிகள் ஊடுறுவி வன்முறைச் செயல்களில் ஈடுபட்டு அரசுச்சொத்துக்களை சேதமடையச் செய்து விடுகின்றனர்.

ஆனால் அந்தப் போராட்டங்களை நடத்திய அரசியல் கட்சிகளே நஷ்ட ஈடாகதொகையைச் செலுத்த வேண்டியநிலை உள்ளது. இந்த வகையில், பாமக 39 லட்சம் ரூபாயும், இந்து முன்னணி ரூ 4 லட்சமும், வேறு சிலஅமைப்புகள் ரூ. 3 லட்சமும், திமுக ரூ. 50 ஆயிரமும், மதிமுக 1883 ரூபாயும் நஷ்ட ஈடாக கட்ட வேண்டும்எனக் கூறி அறிவிக்கைகள் அனுப்பப்பட்டுள்ளன.

இதை எதிர்த்து அந்தக் கட்சிகள் உயர்நீதிமன்றத்தை அணுகி தடை உத்தரவு பெற்றுள்ளன. முதலமைச்சரின்முடிவுக்காக இதுதொடர்பான கோப்பு சென்றபோது, இழப்பீட்டுத் தொகையாக விதிக்கப்பட்டிருந்த ரூ. 46லட்சத்து 87 ஆயிரம் ரூபாய்க்கான அறிவிக்கையை திரும்பப் பெறலாம் என உத்தரவிட்டார்.

எவரோ சமூக விரோதிகள் நடத்திய வன்முறைக்கு கட்சிகளை பொறுப்பாக்குவது நீதியாகாது எனவும் முதல்வர்தெரிவித்து ஆணையிட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Please Wait while comments are loading...