பெரியாருக்கு எதிர்ப்பு-டவரில் ஏறி போராட்டம்

Subscribe to Oneindia Tamil

கோவை:ஸ்ரீரங்கத்தில் பெரியார் சிலையை அமைப்பதை எதிர்த்து கோவையில் செல்போன்கோபுரத்தில் ஏறி தற்கொலை செய்து கொள்ளப் போவதாக கூறி போராட்டம் நடத்தியஇந்து மக்கள் கட்சித் தொண்டர் கைது செய்யப்பட்டார்.

Prabu

கோவை சிங்காநல்லூர் இந்து மக்கள் கட்சியின் பகுதி பொருளாளராக இருப்பவர்பிரபு. நேற்று காலை திருச்சி ரோட்டில் உள்ள அய்யர் மருத்துவமனை பஸ்நிறுத்ததிற்கு இவர் வந்தார். இங்குள்ள கட்டடத்தின் மேல் பகுதியில்அமைக்கப்பட்டிருந்த செல்போன் கோபுரம் மீது சரசரவென ஏறினார்.

சில விநாடிகளில் 100 மீட்டர் உயரம் கொண்ட கோபுரத்தின் உச்சிக்குச் சென்றுவிட்டார். அங்கு போன பின்னர் ஒரு இரும்புத் தடுப்பின் மீது நின்று கொண்டு கீழ்நோக்கி சத்தமாக பேசினார்.

Telephone Towerஇதைப் பார்த்ததும் அங்கு ஏராளமானோர் கூடி விட்டனர். போக்குவரத்துபாதிக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்து பிட் நோட்டீஸ்களை கீழே வீசினார். அதில்,ஸ்ரீரங்கத்தில் அராஜகத்திற்கு விதை விதைக்காதீர், ஸ்ரீரங்கத்தில் பெரியார் சிலைநிறுவுவதை கண்டிக்கிறோம், இந்து மக்கள் கட்சி, கோவை என்று எழுதப்பட்டிருந்தது.

மேலும், பிரபு மேலிருந்தபடி பெரியார் சிலையை ஸ்ரீரங்கத்தில் அமைக்கக் கூடாது.மீறி அமைத்தால் நான் கீழே குதித்துத் தற்கொலை செய்து கொள்வேன் என்றுகூறினார்.

இதையடுத்து போலீஸார் அங்கு விரைந்து வந்து பிரபுவை கீழே இறங்குமாறு கூறினர்.பின்னர் அவரிடம் செல்போன் மூலம் பேச்சுவார்த்தை நடத்தினர். யாரும் மேலே வரக்கூடாது. எனது கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். இல்லாவிட்டால் நான் கீழேகுதித்து விடுவேன் என தொடர்ந்து மிரட்டியபடி இருந்தார்.

இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் அங்கு வந்தனர். மேலே சென்று பிரபுவை கீழேகொண்டு வர முயற்சி எடுக்கப்பட்டது. ஆனால் பிரபுவின் மிரட்டலால் அது சரிப்பட்டுவரவில்லை.

இதையடுத்து கட்சிப் பிரமுகர்களுடன் பேச அவர்களை அழைக்கிறோம். முதலில்கீழே வாருங்கள் என்று போலீஸார் கோரிக்கை விடுத்தனர். அதிலும் அவர்சமாதானமடையவில்லை. இந்த நிலையில் மழை பெய்யத் தொடங்கியது. பலத்தமழை கொட்டியதால், பயந்து போன பிரபு தானே கீழே இறங்கி வந்தார்.

மெதுவாக இறங்கி வந்த அவரை போலீஸார் கைது செய்து ஜீப்பில் அள்ளிப் போட்டுகாவல் நிலையத்திற்குப் பறந்தனர். வாலிபரின் இந்த செல்போன் கோபுர மிரட்டலால்கிட்டத்தட்ட இரண்டரை மணி நேரம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+