கோவில் நில ஆக்கிரமிப்பு: தப்பினார் பீட்டர்
சென்னை:கோவில் நிலத்தை ஆக்கிரமித்ததாக கூறி காங்கிரஸ் எம்எல்ஏ பீட்டர் அல்போன்ஸ், கர்நாடக இசைப் பாடகர்பாலமுரளி கிருஷ்ணா உள்ளிட்டோருக்கு தமிழக அரசின் இந்து அறநிலையத் துறை அனுப்பிய நோட்டீஸைசென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
பீட்டர், பாலமுரளி கிருஷ்ணா உள்ளிட்ட 11 பேருக்கு இந்து அறநிலையத்துறை கடந்த 1998ம் ஆண்டு ஒருநோட்டீஸை அனுப்பியது. அதில், சென்னை கதீட்ரல் சாலையில், கனகஸ்ரீ நகரில் தாங்கள் குடியிருக்கும் வீடுகள்அமைந்துள்ள நிலம், மைலாப்பூர் மாதவ பெருமாள் கோவிலுக்குச் சொந்தமானது. எனவே இடத்தைக் காலிசெய்ய வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
இதை எதிர்த்து பீட்டர் உள்ளிட்ட அனைவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்தமனுவை நீதிபதி பத்ருடு விசாரித்தார். அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், கடந்த 100ஆண்டுகளுக்கும் மேலாக இந்த நிலங்கள் பல்வேறு நபர்களின் பெயர்களில் இருந்துள்ளன.
கடந்த பல ஆண்டுகளாக மனுதாரர்கள் இங்குதான் வசித்து வருகின்றனர். எனவே இந்த நிலத்தை ஆக்கிரமித்துஇருப்பதாக இந்து அறநிலையத்துறை கூறுவது நியாயமற்றது. அனைத்து நிலங்களுக்கும் முறையான பத்திரங்கள்உள்ளன என்று வாதிட்டனர்.
இந்து அறநிலையத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நளினிஸ்ரீ, இந்த நிலங்களுக்கான பட்டா பத்திரங்கள்கோவில் பெயரில்தான் உள்ளன என்றார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ஆக்கிரமிப்பாளர்கள் என்று கருதப்படுவோருக்கு எதிராக சிவில்வழக்குதான் தொடர முடியும். அதற்குப் பதில் நோட்டீஸ் அனுப்பியது சட்ட விரோதம். தேவைப்பட்டால்அவர்கள் மீது சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம் என கூறி நோட்டீஸை ரத்து செய்து உத்தரவிட்டார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications