ஈராக்: அமெரிக்காவிடம் செளதி போட்ட குண்டு

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்:அமெரிக்க படைகள் ஈராக்கை விட்டு வெளியேறினால், ஷியா பிரிவினரின்தாக்குதலிலிருந்து காத்துக் கொள்ள சன்னி பிரிவு முஸ்லீம்களுக்கு ஆயுத,நிதியுதவிகளை செய்வோம் என அமெரிக்காவிடம் செளதி அரேபியாதெரிவித்துள்ளது.

ஈராக்கில் கால் வைத்ததால் அதிபர் ஜார்ஜ் புஷ் பெரும் நஷ்டங்களை தொடர்ந்துசந்தித்து வருகிறார். ஈராக்கில் நுழைந்து இத்தனை காலமாகியும் அங்கு அமைதிதிரும்பவில்லை. தினசரி நூற்றுக்கணக்கனோர் இறந்து வருகின்றனர். அமெரிக்கபடையினரும் கணிசமான அளவில் கொல்லப்பட்டு வருகின்றனர்.

புஷ்ஷின் ஈராக் கொள்கை தவறானது என்பதை சமீபத்தில் அந்நாட்டில் நடந்தநாடாளுமன்ற இடைக்காலத் தேர்தலின்போது மக்கள் தெளிவாக காட்டி விட்டனர்.இதனால் ஈராக்கிலிருந்து படைகளை வாபஸ் பெற புஷ் நிர்வாகம் தீர்மானித்துள்ளது.விரைவில் இதுதொடர்பாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் எனஎதிர்பார்க்கப்படுகிறது.

இந் நிலையில், அமெரிக்க படைகள் ஈராக்கை விட்டு வெளியேறினால், அங்குசிறுபான்மையாக உள்ள சன்னி பிரிவு முஸ்லீம்களுக்கும், பெரும்பான்மையாகவசிக்கும் ஷியா பிரிவு முஸ்லீம்களுக்கும் இடையே இனக் கலவரம் ஏற்படும் சூழல்உருவாகியுள்ளது.

ஷியாக்கள் தாக்குதலில் இருந்து சன்னிகளை காப்பாற்ற அவர்களுக்கு ஆயுத, பணஉதவியை செய்வோம் என அமெரிக்காவின் நெருங்கிய அரபு நண்பனான செளதிஅரேபியா கூறியுள்ளது.

சமீபத்தில் அமெரிக்க துணை அதிபர் டிக் செனி செளதி சென்றிருந்தபோது, செளதிமன்னர் அப்துல்லா இதை தெள்ளத் தெளிவாக எடுத்துச் சொல்லிவிட்டார் எனநியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை கூறுகிறது.

ஷியாக்களுக்கு ஈரான் உதவிகளை செய்து வரும் நிலையில், அமெரிக்கப் படைகள்வெளியேறினால் சன்னிகள் கொன்று குவிக்கப்படுவார்கள் என செளதி அச்சம்தெரிவித்துள்ளது. இதைத் தடுக்க சன்னிகளுக்கு (சதாம் இந்தப் பிரிவைச் சேர்ந்தவரே,செளதி மன்னரும் சன்னி பிரிவை சேர்ந்தவர்) முழு உதவி செய்வோம் என செளதிகூறியுள்ளது.

அதே போல இராக்கில் அமைதி ஏற்படுத்துவதற்காக ஈரானுடன் (இது ஷியா பிரிவுமுஸ்லீம்கள் நிறைந்த நாடு) அமெரிக்கா தூதரக அளவில் பேச்சு மேற்கொள்ளக்கூடாது எனவும் செளதி கோரியுள்ளது. அதே நேரத்தில் இஸ்ரேல், பாலஸ்தீனபேச்சுவார்த்தையை விரைந்து மேற்கொள்ள இஸ்ரேலை அமெரிக்கா நிர்ப்பந்திக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார் செளதி மன்னர்.

தற்போது அமெரிக்காவின் வேண்டுகோளை ஏற்று ஈராக்கில் உள்ள சன்னிபிரிவினருக்கு நிதியுதவி அளிக்காமல் செளதி நிறுத்தி வைத்துள்ளது. ஆனால் இதுநீடிப்பது அமெரிக்காவின் கையில்தான் உள்ளது என தற்போது செளதி கூறியுள்ளது.

சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்தது மாதிரி, சதாமின் அராஜகம் ஒரு பக்கம்இருந்தாலும் இன மோதல்கள், கலவரங்கள் இல்லாமல் அமைதியாக இருந்த இராக்கில்தனது காலை வைத்து அந்த நாட்டையே குட்டிச்சுவராக்கிவிட்டது அமெரிக்கா.

இப்போது ஷியா-சன்னி என அந் நாட்டு முஸ்லீம்களிடையே பிரிவினையையும்மறைமுகமாகத் தூண்டிவிட்டு, நாடே இனப் போரில் மூழ்கும் நிலையைஉருவாக்கிவிட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+