பூமா தேவியை தரிசாக போட்டால்..: ஜெ
சென்னை:தஞ்சை மாவட்டத்தில் நெல் கொள்முதலை அரசு தொடங்க வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர்ஜெயலலிதா கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை,
நல்ல மழை பெய்தும் மேட்டூர் அணையில் தேவையான நீர் இருப்பு இருந்தும் விவசாயிகளுக்கு விவசாயம்செய்வதில் பிரச்சனைகள் நீடித்துக் கொண்டுதான் இருக்கிறது. பழைய கூட்டுறவு கடன் ரத்து என்கிற நாடகத்தில்பெரும் பயணாளிகள் திமுகவினர் தான்.
விவசாயிகளுக்கான புதிய கூட்டுறவு கடன் வழங்கப்படும் என்று சொல்லப்பட்டாலும் கடன் பெற்றவர்கள்என்னவோ இதிலும் திமுகவினர்தான். இவை அனைத்தையும் மீறி பூமா தேவியை தரிசாக போட்டால் வீட்டுக்குஆகாது என்கிற சம்பிரதாயத்தில் நம்பிக்கை வைத்து வேறு வகையில் கடன் பெற்று விவசாயம் செய்து அறுவடைநாளில் நெல் கொள்முதல் இல்லை, என்றால் விவசாயிகளுக்கு எப்படி இருக்கும்?
ஆயிரம் தேள்கள் ஒரு சேர கொட்டியது போன்று துடிப்புக்கு ஆளாகி விவசாயிகள் திணறிக்கொண்டிருக்கிறார்கள். தஞ்சை மாவட்டத்தில் நுகர்பொருள் வாணிபத் கழக கொள்முதல் நிலையங்களில் நெல்கொள்முதல் செய்வது நிறுத்தப்பட்டு விட்டது என்ற அறிவிப்பு ஆயிரம் தேள் கொட்டுகிற நிலைக்கு ஒப்பானதுதான்.
சில கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கு பணம் பட்டுவாடா செய்யாத நிலையும்ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல கொள்முதல் செய்த நெல்லை திரும்ப எடுத்து செல்லுங்கள் என்று கேட்டுக்கொள்ளப்படுவதாகவும், இனி நெல் கொள்முதல் நடைபெறாது என்று வாய்மொழி உத்தரவுபிறப்பிக்கப்பட்டிருப்பதாக கூறுப்படுகிறது. இதனால் விவசாயிகள் மிகுந்த கலக்கத்திற்கு ஆளாகியுள்ளனர்.
பாதிக்கப்பட்ட விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தும் இதுவரை உரிய நடவடிக்கை ஏதுவும்எடுக்கவில்லை. இது குறித்து நடவடிக்கை எடுக்கவிட்டால் விவசாயிகள் அனைவரும் அரசுக்கு எதிராகபோராட்டம் நடத்தப் போவதாக எச்சரித்தும் மைனாரிட்டி திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
விவசாயிகள் குறையை தீர்க்க நுகர் பொருள் வாணிபக்கழகம் நெல் கொள்முதலை தொடங்க வேண்டும் என்றும்கொள்முதல் செய்த நெல்லுக்கு உடனடியாக பணம் பட்டுவாடா செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்திகோட்டுக்கொள்கிறேன். இதுகுறித்து அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால் விவசாயிகளுக்குஆதராவாக அதிமுக மாபெரும் போராட்டத்தில் ஈட வேண்டியிருக்கும் என்பதை எச்சரிக்கையாகத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications