காவல் நிலையத்தில் ரெய்டு: நீதிபதிகள் சஸ்பெண்ட்
திருநெல்வேலி:நள்ளிரவில் காவல் நிலையத்திற்கு சென்று சோதனை நடத்தி நெல்லையில், பரபரப்பை ஏற்படுத்திய மாவட்டமுதன்மை செஷன்ஸ் நீதிபதி மற்றும் நீதித்துறை நடுவர் ஆகியோர் திடீர் என சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியாக இருப்பவர் நாகநாதன். 4வது நீதித்துறை நடுவராக இருப்பவர்நாகராஜன். இருவரும் கடந்த 8ம் தேதி நள்ளிரவில் பாளையங்கோட்டை மேட்டுத் திடலில் உள்ள அரசுமருத்துவமனைக்குச் சென்றனர்.
அங்கு வக்கீல்கள் பயன்படுத்தும் ஸ்டிக்கர் பொருத்தப்பட்ட கார் ஒன்று நின்று கொண்டிருந்தது. இதைப் பார்த்தஇரு நீதிபதிகளும் அங்கு வந்த உதவி ஆணையர் மரிய ஜார்ஜ், சப் இன்ஸ்பெக்டர் ராஜகோபால் ஆகியோரிடம்இது யாருடைய கார் என்று விசாரித்துள்ளனர்.
அதற்கு இரு அதிகாரிகளும் பதில் அளித்துள்ளனர். ஆனால் அதில் திருப்தி ஏற்படாத அவர்கள் இரு காவல்துறைஅதிகாரிகளையும் கடுமையாக கடிந்து பேசி விட்டு அங்கிருந்து பாளையங்கோட்டை காவல் நிலையம்சென்றனர்.
அப்போது அங்கு இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர் ஆகியோர் இல்லை. அவர்கள் எங்கே என்று தலைமைக்காவலரிடம் விசாரித்துள்ளனர். இருவரும் ரோந்துப் பணியில் இருப்பதாக தலைமைக் காவலர் கூறியுள்ளார்.அதை எழுத்துப் பூர்வமாக தருமாறு நீதிபதிகள் கோரவே அவ்வாறே அவரும் எழுதிக் கொடுத்துள்ளார்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து விசாரிக்க சென்னை உயர்நீதிமன்ற கண்காணிப்புப்பிரிவுக்கு உத்தரவிடப்பட்டது. அப்பிரிவு கூடுதல் எஸ்.பி. அன்புமணி தலைமையிலான குழு கடந்த 10ம் தேதிநெல்லை வந்து உதவி ஆணையர் மரிய ஜார்ஜ், சப் இன்ஸ்பெக்டர் ராஜகோபால், தலைமைக் காவலர்ஆகியோரிடம் விசாரணை நடத்தியது.
விசாரணைக்குப் பின்னர் இதுதொடர்பான அறிக்கை உயர்நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது. அதன்அடிப்படையில் இரு நீதிபதிகளும் நேற்று சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். நேற்று காலை இரு நீதிபதிகளும்பணிக்கு வந்திருந்தனர். பிற்பகலில் சஸ்பெண்ட் உத்தரவு அவர்களிடம் வழங்கப்பட்டது. இதையடுத்து இருவரும்வீட்டுக்குப் புறப்பட்டுச் சென்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications